நீங்க மவுத் வாஷ் அதிகம் உபயோகிக்கும் நபரா?

நாம் மவுத் வாஷ் அதிகம் உபயோகிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா? -விவரம் உள்ளே!

Last Updated : May 5, 2018, 06:05 PM IST
நீங்க மவுத் வாஷ் அதிகம் உபயோகிக்கும் நபரா?  title=

நம் முன்னோர்கள் அனைவரும் பல்துலக்க உபயோகித்த பொருள் வெப்பம் குச்சி. ஆனால், இப்போது நாம் பேஸ்ட், பிரஸ் மற்றும் மவுத் வாஷ் என பலவற்றை உபயோகித்து வருகிறோம். 

இன்றைய காலகட்டத்தில் மவுத் வாஷ் செய்யும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் உள்ளது. மற்றவர்களுடன் பேசும் போது வாயில் இருந்து துர்நாற்றம் வராமல் இருக்க வேண்டும் என தினமும் இரு முறையாவது மவுத்வாஷ் செய்பவர்கலும் உண்டு. மவுத் வாஷில் பாக்டீரியாவை அழிக்கும் திறன் இருப்பதால் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கிறது என இதை உபயோகித்து வருகின்றனர்.

ஆனால் மவுத் வாஷ் செய்வதால் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதன்படி ஒரு நாளைக்கு இரு முறை மவுத் வாஷ் செய்பவர்களுக்கு 55% சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. மவுத் வாஷ் உபயோகிப்பதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இது தொடரும்போது சர்க்கரை நோய் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது. 

இந்த ஆய்விற்க்காக அதிக எடை கொண்ட, அதே நேரத்தில் சர்க்கரை உள்ளிட்ட எந்த தொற்றா நோயினாலும் பாதிக்கப்படாத 45 முதல் 60 வயதுடைய 1,200 பேர் எடுத்துக்கொள்ளப்பட்டனர். சுமார் 3 ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

ஆய்வில் பங்கேற்ற 1200 பேரில் 43% பேர் தினம் ஒரு முறையும், 22% பேர் இரண்டு முறையும் மவுத் வாஷ் செய்பவர்கள். மவுத் வாஷ் செய்வதினால் அவர்களின் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து கண்டறியப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களின் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து பெரும்பாலானோர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

 

Trending News