ஜிம்பாப்வேவின் புதிய அதிபராக எம்மர்சன் நாங்காக்வா பதவி ஏற்பு

பதட்டமான சூழ்நிலைக்கிடையில் ஜிம்பாப்வேவின் புதிய அதிபராக எம்மர்சன் நாங்காக்வா இன்று பதவியேற்றார்.

Last Updated : Nov 24, 2017, 06:17 PM IST
ஜிம்பாப்வேவின் புதிய அதிபராக எம்மர்சன் நாங்காக்வா பதவி ஏற்பு title=

ஜிம்பாப்வே நாட்டில் அதிபர் ராபர்ட் முகாபேக்கு துணை அதிபர் எம்மர்சன் நாங்காக்வாக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. அந்நாட்டின் இராணுவ தளபதி  சிவெங்கா துணை அதிபரை ஆதரித்தார்.

ஜிம்பாப்வேவின் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியது. இதனால் அதிபர் ராபர்ட் முகாபே ராணுவ சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் புதிய அதிபராக, துணை அதிபர் இருந்த எம்மர்சன் நாங்காக்வா பதவியேற்றார். எனவே அதிபர் ராபர்ட் முகாபே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து, இன்று ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக எம்மர்சன் நாங்காக்வா பதவி ஏற்றுக்கொண்டார். 

 

 

Trending News