இன ரீதியாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு, முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா தக்க பதிலடி கொடுத்துள்ளார்!
அமெரிக்க ஜனநாயக பிரிதிநிதிகள் சபையில் கடந்த ஜூலை 16-அன்று வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேறும் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடைப்பெற்றது. இந்த ஆலோசனையின்போது 4 கருப்பின எம்.பி.,க்களை குறிப்பிட்டு பேசிய அதிபர் டிரம்ப், அவர்கள் அமெரிக்காவில் மகிழ்ச்சியாக இல்லை என்றால் தங்களின் பிறப்பிட நாடு எதுவோ அங்கேயே திரும்பிச் செல்லட்டும் என்றார்.
அவர்களது சொந்த நாட்டிற்கு சென்று அங்குள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு பின்னர் அமெரிக்கா திரும்பட்டும். அமெரிக்க திரும்பிய பின்னர் அமெரிக்காவின் பிரச்சனைகளுக்கு அவர்கள் யோசனை கூறட்டும் என தெரிவித்தார்.
ட்ரம்பின் இந்த கருத்து பெரும் சர்ச்சையினை உண்டாக்கிய நிலையில்., இந்த கருத்தை திரும்பப் பெறும்படி அவையில் கோஷம் எழுப்பப்பட்டது. இதுனால் 10 விநாடிகள் பேச்சை நிறுத்திய ட்ரம்பு, கோஷம் அடங்கியதும் பேச்சை தொடர்ந்தார்.
இது தொடர்பாக தற்போது எதிர்ப்பு அதிகரித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ட்ரம்ப் தான் அப்படு ஒன்றும் பேசவேயில்லை என மறுத்தார். இந்நிலையில் தற்போது ட்ரம்பின் இந்த இனவாத பேச்சு குறித்து மிச்சில் ஒபாமா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
What truly makes our country great is its diversity. I’ve seen that beauty in so many ways over the years. Whether we are born here or seek refuge here, there’s a place for us all. We must remember it’s not my America or your America. It’s our America.
— Michelle Obama (@MichelleObama) July 19, 2019
இந்த பதிவில், நமது நாட்டை பிரிவினை கொண்ட நாடாக மாற்ற நினைக்கிறார்களா; நாம் இங்கு பிறந்தவர்களாகவோ அல்லது அகதியாக வந்தோமோ அப்படி இருந்தாலும் இது அனைவருக்குமான இடம். நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது எனது அமெரிக்காவோ அல்லது உங்களின் அமெரிக்காவோ இல்லை. இது நமது அமெரிக்கா என டிரம்பின் பெயரை குறிப்பிடாமல் பதிவிட்டுள்ளார்.