ட்விட்டர் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து, பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றின் தலைமை நிறுவனமான மெட்டாவும் ஆட்குறைப்பில் ஈடுபட்டது. அந்நிறுவனத்தில் பணியாற்றிய 11,000 பேர் ஏறத்தாழ 13 சதவீதம் பேர் ஒரே நாளில் நேற்று முன்தினம் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு தானே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்திருந்தார். பணிநீக்க நடவடிக்கை வீடியோ கால் மூலம் மார்க் சக்கர்பர்க் மேற்கொண்டார். அதில், நிறுவனத்திற்கு அயராது உழைத்த ஊழியர்களுக்கு பாராட்டும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் ஊழியர்களிடம் மட்டும் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. வெளியான அந்த வீடியோவில்,"நான் இதை சொல்லியே ஆக வேண்டும். இதற்கு முழு பொறுப்பை முன்னின்று ஏற்றுக்கொள்கிறேன்.
மேலும் படிக்க | இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ டிக் - கட்டண விவரம் அறிவிப்பு!
#Zuckerberg: "I want to say, upfront, that I take full responsibility."
Then fires 11,000 employees instead of himself. #Meta pic.twitter.com/7XWxUQaKno
— Cory Provost (@coryprovost) November 9, 2022
உணர்ச்சிகளுக்கு என்று ஒரு வரம்பு இருக்க வேண்டும். நான் ஒரு நிறுவனத்தின், நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறேன் எனும்போது, நிறுவனத்தின் நலன் மற்றும் வழிகாட்டுதலுக்கு பொறுப்பானவாக நான் இருக்க வேண்டும். இது போன்ற முடிவுகள் உட்பட நாங்கள் அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யும் இடத்திலும் இருக்கிறோம்.
இது முழுவதுமாக என்னுடைய முடிவுதான். இந்த நிறுவனத்தை தொடங்கி கடந்த 18 ஆண்டுகளில் இதுதான் நான் எடுத்த மிக கடினமான முடிவு. இந்த நிறுவனத்திற்கு என்று அனைத்தையும் கொடுத்த மக்களை நாம் இழந்திருக்கிறோம். நீங்கள் ஒவ்வொருவரும் இந்த நிறுவனத்தின் உருவாக்கத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் பங்களித்துள்ளீர்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள்" என்றார். தற்போது, அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
2004இல் பேஸ்புக் தொடங்கப்பட்ட பிறகு நிதியை சமாளிப்பதற்கு அந்த நிறுவனம் மேற்கொண்ட முதல் ஆட்குறைப்பு நடவடிக்கை இதுதான். மெட்டா நிறுவனத்தின் வருவாயில் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளதுதான் இந்த ஆட்குறைப்புக்கு காரணம் என கூறப்படுகிறது. மெட்டா நிறுவனம் பேஸ்புக் மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பையும் தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | டிவிட்டரை அடுத்து அதிரடியில் இறங்கிய மெட்டா... ஆயிரக்கணக்கானோர் பணி நீக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ