Israel Hamas War: இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே 26வது நாளாக இன்றும் போர் நடந்து வருகிறது. இதற்கிடையில், நேற்று (செவ்வாய்) இரவு, வடக்கு காசாவில் உள்ள மிகப்பெரிய ஜபாலியா அகதிகள் முகாமை இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் ஹமாஸின் மூத்த தளபதி இப்ராஹிம் பியாரி உட்பட 50 போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
மக்களை கொலை செய்யும் இஸ்ரேல் பொய்களை பரப்பி வருகிறது -ஹமாஸ்
அதே நேரத்தில், ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதார அமைச்சகம், இஸ்ரேலிய தாக்குதல்களில் டஜன் கணக்கானவர்கள் இறந்ததாகவும், நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் Hazem Qassem, அந்த முகாமில் மூத்த தளபதிகள் யாரும் இல்லை என்று மறுத்தார். மேலும் பொதுமக்களை கொன்று குவித்து வரும் இஸ்ரேல், அதை மறைக்க இப்படி பொய்களை கூறி வருகிறது என்று கூறினார். நேற்று இரவு அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க - ஐ.நா-வில் போர் நிறுத்த தீர்மானம்: இந்தியா ஏன் புறக்கணித்தது? அதற்கான காரணம் என்ன?
ஜபாலியாவில் 400 பேர் கொல்லப்பட்டனர் -ஹமாஸ்
1948 ஆம் ஆண்டு இஸ்ரேலுடனான போரில் இருந்து அகதிகளாக வந்த குடும்பங்கள் வசிக்கும் ஜபாலியாவில் 400 பேர் கொல்லப்பட்டதாகவும் காயம் அடைந்ததாகவும் ஹமாஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. மறுபுறம், போரில் காயமடைந்த பாலஸ்தீனியர்கள் ரஃபா எல்லையை கடக்க அனுமதிக்கப்படும் என எகிப்து கூறியுள்ளதால், அவர்கள் தகுந்த சிகிச்சை பெற முடியும் சூழல் உருவாகி உள்ளது.
அதிக அளவில் கொலை செய்யப்படும் குழந்தைகள், பெண்கள்
அதேநேரத்தில் இந்த தாக்குதல் சம்பத்தின் போது தமது படையை சேர்ந்த 11 பேரும் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் குறித்து, அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கிவிட்டோம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் காசா மீது பல வாரங்களாக தொடர்ந்து குண்டு வீசி வருவது குறிப்பிடத்தக்கது. அதுவும் குறிப்பாக குழந்தைகள், பெண்கள் அதிக அளவில் கொல்லப்பட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க - Israel-Hamas War: ஹமாஸ் தாக்குதல் எங்கள் தோல்வி -ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்
ஹமாஸ் கமாண்டர் இப்ராஹிம் பியாரி கொல்லப்பட்டார் -ஐடிஎஃப்
காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபாலியா மீது போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் கமாண்டர் இப்ராஹிம் பியாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (Israel Defense Forces) தெரிவித்துள்ளது. "பயாரி போன்ற நிலத்தடி சுரங்கப்பாதை வளாகத்தில் டஜன் கணக்கான ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருந்தனர், ஆனால் இஸ்ரேலிய படைகள் தாக்கியபோது அது இடிந்து விழுந்து அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்" என்று IDF செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் கான்ரிகஸ் கூறியுள்ளார்.
Over the past day, IDF troops operated in a Hamas terrorist stronghold in Jabaliya, northern Gaza.
The stronghold was used for training and execution of terrorism activities.
During the ground activity, the troops eliminated approx. 50 terrorists, as well as destroyed… pic.twitter.com/XMT7ZTZYKv
— Israel Defense Forces (@IDF) October 31, 2023
உலகத்துடன் துண்டிக்கப்பட்ட 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்
காசாவின் ஜபலியா பகுதியில் உள்ள அகதிகள் முகாம் சுமார் 1.4 சதுர கிமீ பரப்பளவில் பரவியுள்ளது. தாக்குதலுக்கு முன், சுமார் 1.16 லட்சம் பேர் இங்கு தஞ்சம் அடைந்துள்ளனர். மறுபுறம், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியில் காசாவில் தகவல் தொடர்பு மற்றும் இணைய சேவைகள் மீண்டும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதன் காரணமாக காசாவில் உள்ள 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உலகத்துடன் துண்டிக்கப்பட்டு உள்ளனர்.
விரைவில் பணயக் கைதிகளை விடுவிபோம் -ஹமாஸ்
வரும் நாட்களில் பணயக் கைதிகளாக உள்ள மேலும் பல வெளிநாட்டினரை விடுவிப்பதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. பணயக் கைதிகளாக இருந்த 4 பொதுமக்களை ஹமாஸ் இதுவரை விடுவித்துள்ளது. இவர்களில் 2 பேர் அமெரிக்கர்கள் மற்றும் 2 பேர் இஸ்ரேலிய பிரஜைகள். விடுவிக்கப்பட்ட நான்கு பணயக்கைதிகளும் பெண்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ