பாகிஸ்தான் பொருளாதார முன்னேற்றம்: சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பாகிஸ்தான் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்குப் பிறகு, அந்நாட்டில் பங்குச் சந்தைகள் ஊக்கம் பெற்றுள்ளன. பின்னர், நாட்டின் கனிமத் துறையில் இருந்து வந்த செய்திகள் சந்தையின் லாபத்தை மேலும் வலுப்படுத்தியது என்பது இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டதற்கு அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
இது, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு நல்ல செய்தியாக இருக்கும், பங்குச் சந்தை 24 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியது, பாகிஸ்தான் மக்களின் கவலைகளை கொஞ்சம் குறைத்திருக்கிறது. பாகிஸ்தான் பங்குச் சந்தையின் (Pakistan Stock Exchange (PSX)) பங்குகள் 48,000 ஐத் தாண்டி 24 மாதத்தில் அதிகமாக உள்ளது.
இந்த நேர்மறையான குறிப்புகள் மேலும் தொடரும் என பங்குச் சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கிறார்கள். தி நியூஸ் அறிக்கையின்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் (International Monetary Fund (IMF)) பாகிஸ்தானின் ஒப்பந்தத்திற்குப் பிறகு பங்குச்சந்தை வேகம் பெற்றுள்ளது. அத்துடன் சேர்த்து, பாகிஸ்தான் நாட்டின் கனிமத் துறையின் செய்திகள் சந்தையின் லாபத்தை வலுப்படுத்தியது.
ஜூலை 27 அன்று இன்ட்ரா-டே வர்த்தகத்தின் போது பெஞ்ச்மார்க் குறியீடு 1,010.72 புள்ளிகள் அல்லது 2.15 சதவீதம் உயர்ந்து 48,062.56 ஆக இருந்தது, இது முந்தைய முடிவான 47,076.9 புள்ளிகள் மற்றும் 21 மாத உயர்வை விட அதிகமாகும்.
IMF ஒப்பந்தமும் பொருளாதார ஊக்கமும்
IMF உடனான பாக்கிஸ்தானின் ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்திற்குப் பிறகு சந்தை 6,600 புள்ளிகளுக்கு மேல் (15.9 சதவீதம்) அதிகரித்துள்ளதாக தி நியூஸ் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | பாகிஸ்தானில் மனித குண்டுவெடிப்பு தாக்குதல்... 42 பேர் பலி - பின்னணி என்ன?
சிறப்பு முதலீட்டு வசதிக் குழுவின் (Special Investment Facilitation Council (SIFC)) கீழ், வெளிநாட்டு முதலீட்டைப் பெறுவதற்காக ஆகஸ்ட் 1 முதல் ரெகோ டிக் மற்றும் பிற சுரங்கங்கள் மற்றும் கனிமத் திட்டங்கள் தொடர்பாக பாகிஸ்தான் கனிம உச்சி மாநாட்டை அரசாங்கம் ஏற்பாடு செய்கிறது.
பாகிஸ்தான்-குவைத் முதலீட்டு நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவர் சமியுல்லா தாரிக், தாதுக்களில் எதிர்பார்க்கப்படும் முதலீடு சந்தை வளர்ச்சிக்கு ஒரு 'முக்கிய' பங்களிப்பாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். முக்கிய காரணிகள் தாதுக்களில் முதலீடு பற்றிய நம்பிக்கை மற்றும் பிற நிறுவனங்கள்/துறைகளில் நேர்மறையான எதிர்பார்ப்புகள் குறிப்பிடத்தக்கது என்று அவர் மேலும் கூறினார்.
பாகிஸ்தான் நிறுவனங்கள் அரம்கோவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
பலுசிஸ்தானில் உள்ள மூலோபாய குவாடர் துறைமுகத்தில், சவுதியின் நிறுவனமான அராம்கோவுடன் இணைந்து 10 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரீன்ஃபீல்ட் சுத்திகரிப்பு திட்டத்தில் ஒத்துழைக்க பாகிஸ்தானிய அரசுக்கு சொந்தமான நான்கு பெரிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது போன்ற பல முன்னெடுப்புகள் மூலம், அதல பாதாளத்தில் இருந்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
மேலும் படிக்க | ஒரு கொடிக்கு ரூ. 40 கோடியா... ஏற்கெனவே கடன் பிரச்னை - பந்தா காட்டுகிறதா பாகிஸ்தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ