விஷமாக மாறிய இந்திய இருமல் மருந்து... 18 குழந்தைகள் பலி!

Uzbekistan 18 children death : இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்டு உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழந்தனர். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 29, 2022, 08:58 AM IST
  • மருந்தின் தயாரிப்பில் நச்சு பொருள் இருந்தது கண்டுபிடிப்பு.
  • இந்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை.
  • இந்திய அரசும் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்.
விஷமாக மாறிய இந்திய இருமல் மருந்து... 18 குழந்தைகள் பலி! title=

Uzbekistan 18 children death : உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த மாரியோன் பயோடெக் நிறுவனம் தயாரித்த Doc-1 Max-1 Syrup இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அந்த மருந்தை ஆய்வகத்தில் பரிசோதித்ததில் எதிலின் கிளைகோல்  (ethylene glycol) என்ற நச்சுப்பொருள் மருந்தின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

இந்த மருத்து, மருத்துவர்களின் பரிந்துரை இன்றி, வீட்டில் பெற்றோர்களால் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று பெற்றோர்களாக இந்த மருந்தை வாங்கியிருக்க வேண்டும் இல்லையென்றால் மருந்தகத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம். குழந்தைகளுக்கான வழக்கமான டோஸை விட இந்த மருத்தை அதிக டோஸ் கொடுத்துள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்த இருமல் மருந்து சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுக்கு குழந்தைகளுக்கு வழங்கலாம் என  மாரியோன் பயோடெக்  என இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறது. 

மேலும் படிக்க | 2023 Predictions: அமெரிக்க அதிபர் எலான் மஸ்க், ஜெர்மனி - பிரான்ஸ் போர் ; கணித்தது யார் தெரியுமா?

தற்போது, உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து, Doc-1 Max மாத்திரைகள் மற்றும் சிரப் வகை மருந்துகள் அந்நாட்டின் அனைத்து மருந்து கடைகளிலும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காமல், நிலை குறித்து ஆராய தவறிய 7 பேரை பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது. 

நொய்டாவை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான மரியன் பயோடெக் தயாரிப்பின் சிரப் மருந்தை உட்கொண்டு, உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளின் உயிரிழந்தது தொடர்பாக இந்தியாவும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. மத்திய மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டு குழுக்கள் இணைந்து விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோன்று, ஹரியானாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் 66 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து உலக சுகாதார நிறுவனம் அதுகுறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | நியூயார்க்கை புரட்டி போடும் பனி பனிப்புயல்! இது வரை 50 பேர் பலி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News