பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் ஹர்னாய் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 20 பேர் இறந்துள்ளனர், சுமார் 150 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகணத்தில் இன்று காலை 5.0 ரிக்டர் அளவுகோல் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹர்னோய் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 20 பேர் பலியானார்கள் என்று பலுசிஸ்தான் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணைஅயத் தலைவர் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் மிகவும் தீவிரமாக இருந்ததால் பல வீடுகள் சேதமடைந்தன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அரசு சார்பில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Earthquake of magnitude 6.0 occurred today around 3:30 am in 14 km NNE of Harnai, Pakistan: National Center for Seismology
— ANI (@ANI) October 6, 2021
பூகம்பம் ஏன் ஏற்படுகிறது?
பூமிக்குள் 7 தட்டுகள் உள்ளன, அவை தொடர்ந்து சுழல்கின்றன. இந்த புவித்தட்டுகள் அதிகம் மோதுகிற இடத்தில், மீண்டும் மீண்டும் மோதும்போது தட்டுகளின் மூலைகளில்அதிக அழுத்தம் உருவாகும்போது, தட்டுகள் பிளந்து கீழே உள்ள ஆற்றல் சீறி வெளியேறும்போது நிலம் நடுங்குகிறது, அது பூகம்பமாய் வெளிப்படுகிறது.
பூகம்பத்தை ரிக்டர் அளவுகோலில் மதிப்பிடுகின்றனர். அதன் அளவைக் கொண்டு அதன் சேதம் மற்றும் பாதிப்பை கணிக்கலாம்.
0 முதல் 1.9 வரையிலான ரிக்டர் அளவு கோலில் ஏற்படும் நில அதிர்வுகள் உணரப்படுவதில்லை. வரைபடத்தால் மட்டுமே பார்க்க முடியும்.
2 முதல் 2.9 வரையிலான ரிக்டர் அளவு கோலில் ஏற்படும் நில அதிர்வுகள் லேசான அதிர்வை மட்டுமே பதிவு செய்யும்.
3 முதல் 3.9 வரையிலான ரிக்டர் அளவு கோலில் ஏற்படும் நில அதிர்வுகள் மிதமான அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
Read Also | மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், பீதியில் உறைந்துள்ள மக்கள்
4 முதல் 4.9 வரையிலான ரிக்டர் அளவு கோலில் ஏற்படும் நில அதிர்வுகளால் பூமி மட்டுமல்ல, சுவர், கதவு, ஜன்னல் ஆகியவை அதிரும்.
5 முதல் 5.9 வரையிலான ரிக்டர் அளவு கோலில் ஏற்படும் நில அதிர்வுகளினால் பொருட்கள் நகரும் அளவு வீரியம் ஏற்படும்.
6 முதல் 6.9 வரையிலான ரிக்டர் அளவு கோலில் ஏற்படும் பூகம்பத்தால், கட்டடங்களின் அஸ்திவாரத்தில் விரிசல் ஏற்படும். வீடுகள் சேதமடையும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
7 முதல் 7.9 வரையிலான ரிக்டர் அளவு கோலில் ஏற்படும் நில அதிர்வுகள். கட்டடங்களை விழச் செய்கின்றன. நிலத்தின் உள்ளே புதைக்கப்பட்டிருக்கும் குழாய்கள் வெடித்துவிடும்.
8 முதல் 8.9 வரையிலான ரிக்டர் அளவு கோலில் ஏற்படும் நில அதிர்வுகள் பெரிய பாலங்களையும் சேதமடையச் செய்துவிடுகின்றன.
9 மற்றும் அதற்கும் அதிகமான ரிக்டர் அளவு கோலில் ஏற்படும் நில அதிர்வுகளால் பெரும் நாசம் ஏற்படும். அதுமட்டுமல்ல, கடல் அருகில் இந்த அளவிலான அதிர்வு ஏற்பட்டால் சுனாமி ஏற்படும்.
Also Read | நடிகை ஊர்வசி ரவுடேலாவை ட்ரோல் செய்யும் ரிஷப் பந்த் ரசிகர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR