விஜய் சேதுபதி மற்றும் கோகுல் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் ஜூங்கா படமத்தின் படப்பிடிப்பு பாரீஸில் நடைபெற்று வருகிறது.
இதில் கதைக்கு ஏற்றது போல தனது கெட் அப்பை மாற்றி நடிப்பை வெளிப்படுத்தி வரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் புதிய தோற்றத்தில் ஸ்டைலிஷ் லுக்கில் காட்சியளிக்கிறார். அவருக்கு ஜோடியாக இப்படத்தில் வனமகன் கதாநாயகி சாயீஷா நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதியின் மகனும் கலந்துகொண்டுள்ளார். விஜய் சேதுபதி போலவே அவரின் மகனும் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குனர் தியாகராஜன் குமார ராஜ இயக்கத்தில் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பினை இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தினில் வெளியிட்டுள்ளார்.
இத்திரைப்படத்திற்கு ஷில்பா என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது!
Shilpa of #SuperDeluxe pic.twitter.com/sD8FV2Ck9O
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.