அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள மதுபான விடுதியில், ஸ்ரீனிவாஸ் குச்சிபொட்லா என்ற இந்தியர் அமெரிக்கரான ஆதம் புரின்டன் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த புதன் கிழமை அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவரால் இனவெறியுடன் சுட்டுக் கொல்லப்பட்டார் ஸ்ரீனிவாஸ் குச்சிபொட்லா. மேலும் உடன் பணிபுரியும் மற்றொரு என்ஜினீயர் அலோக் மதசானி மற்றும் அமெரிக்கர் ஒருவரும் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள மதுபான விடுதியில், ஸ்ரீனிவாஸ் குச்சிபொட்லா என்ற இந்தியர் அமெரிக்கரான ஆதம் புரின்டன் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஹிலாரி கிளின்டன், ஸ்ரீனிவாஸ் குச்சிபொட்லா மரணம் குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஹிலாரி கிளின்டன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
நாட்டில் அச்சுறுத்தல்களும் வெறுப்பினவாதக் குற்றங்களும் உயர்ந்துகொண்டே செல்கின்றன.
கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அலெப்போ நகரை சேர்ந்த 7 வயது சிறுமி பானா அலாபெத் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் இவள் தனது குடும்பத்துடன் அலெப்போவில் இருந்து வெளியேறினாள். தற்போது துருக்கியில் அகதியாக தங்கி இருக்கிறாள்.
இவள் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்று இருக்கும் டொனால்டு டிரம்புக்கு உருக்கமான கடிதம் எழுதி இருக்கிறாள். அதில்:-
அமெரிக்க அரசியலில் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் மருமகன், அதிபரின் மூத்த ஆலோசகர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக பொறுப்பேற்கவுள்ள இவர், அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான அம்சங்களை கவனிப்பார்.
குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, அமெரிக்க அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வரும் ஜனவரி 20-ம் தேதியன்று பதவியேற்க உள்ளார் டொனால்டு டிரம்ப். இதையொட்டி, புதிய அமைச்சரவை மற்றும் அதிகாரிகள் நியமனம் தற்போது நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த ஹிலாரி கிளிண்டனை அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்கடித்து, டொனால்ட் டிரம்பை வெற்றிபெறச் செய்ய அந்நாட்டு பிரதான கட்சிகளின் இணையதளங்களுக்குள் ரஷியா ஊடுருவி, சில ரகசிய தகவல்களை களவாடியதாக ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய டிசம்பர் 30-ம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்துள்ளதால், மக்கள் வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் அமெரிக்க விமானப் படை நடத்தி வரும் தாக்குதலில், அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் அபு அப்கான் அல்-மஸ்ரி கொல்லப்பட்டார்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று நியோ நியூஸ் என்ற தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், டொனால்ட் டிரம்ப்பின் உண்மையான பெயர் தாவூத் இப்ராஹிம் கான் என்று கூறியுள்ளார்கள்.
தற்போது அவர் அமெரிக்க நாட்டின் அதிபராகவவே மாறிவிட்டார். அதுமட்டுமல்லாது அவர் சிறு வயதில் இப்படி தான் இருந்தார் என்று ஒரு புகைப்படத்தையும் காட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மிகப்பெரிய ராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் பலியாகிள்ளனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பெற்கவில்லை.
குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி இடுகின்றனர். ஹிலாரி கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அமெரிக்க வெளியுறவு மந்திரியாக பதவி வகித்தார்.
நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் தேர்தலில் போட்டி இடுகின்றனர்.
குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி இடுகின்றனர். இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் ஏற்கனவே ஹிலாரி-டிரம்ப் இடையே விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி-டிரம்ப் இடையேயான 3-வது விவாதம் நடந்து வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்-ஹிலாரி கிளிண்டன் இடையேயான 2-வது நேரடி விவாதம் துவங்கியது.
குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி இடுகின்றனர். இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் ஏற்கனவே ஹிலாரி-டிரம்ப் இடையே முதல் விவாத நிகழ்ச்சி நியூயார்க்கில் நடைபெற்றது. தற்போது அமெரிக்காவின் செயின்லூயிஸ் நகரில் 2-வது நேரடி விவாதம் துவங்கி உள்ளது. ஆன்லைனில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் 90 நிமிடங்கள் இருவரும் பதிலளிப்பார்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்-ஹிலாரி கிளிண்டன் இடையேயான நேரடி விவாதம் துவங்கியது.
குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் ஹிலாரி-டிரம்ப் இடையே முதல் விவாத நிகழ்ச்சி நியூயார்க்கில் துவங்கியது.
விவாதத்தின் போது ஹிலாரி-டிரம்ப் பேசியதாவது:-
மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அந்த தாக்குதலில் 166 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்று பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் பேசினார்.
டில்லி மற்றும் அதனை சுற்றிய புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆனால் இன்று காலை வழக்கத்திற்கு மாறாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கனமழையால் வெளிச்சம் குறைவாகவே உள்ளதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய செய்து செல்கின்றன.
ராணுவ பராமறிப்பு பணிகள் மற்றும் மறு விநியோகம் போன்ற பணிகளை மேற்கொள்ள இரு நாட்டின் தரை, வான் மற்றும் கடல் தளங்களை ஒருவருக்கொருவர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு அதிகரிக்கும் என தெரிகிறது.
இந்த ஒப்பந்த ஏற்பாட்டின்படி, அமெரிக்க ராணுவத்தினர் இந்தியாவில் இருந்து பணியாற்றும் சூழல் தற்போது இல்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஷ் கார்டரும் தெரிவித்துள்ளனர்.
உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இன்று பல்வேறு தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். 'மேற்காசிய நாடுகளான, சிரியா மற்றும் ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், தங்களின் அமைப்புகளை உலகம் முழுவதும் நிறுவுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இஸ்லாமிய எதிரி நாடுகள் மீது குறி வைத்து கொடூர தாக்குதல் நடத்துவது அவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.