உலகளவில் விளையாட்டு காலெண்டர்களை தடம் புரட்டியுள்ள கொரோனா வைரஸ். இந்த வளர்ச்சியின் தற்போதைய முன்னேற்றத்தில் பாகிஸ்தான் - வங்கதேசத்திற்கு இடையிலான தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் கொண்ட தொடரில் சாதனைகள் பல படைத்த ரோகித் சர்மா, மூன்று வடிவ போட்டிகளிலும் டாப் 10 இடத்திற்குள் இடம்பிடித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவிருந்த ஆஸ்திரேலியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வெளியிடப்படாத காரணங்களுக்காக பின்னர் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வங்கதேசத்தின் ஒருநாள் டெஸ்ட் மற்றும் ஜிம்பாப்வேவையும் உள்ளடக்கிய முத்தரப்பு டி20 சர்வதேச தொடருக்கான சுற்றுப்பயண தேதிகளை வங்கதேச கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது!
டெஸ்ட் போட்டிகளில் இனி ஜெர்ஸி எண் பயன்படுத்தப்படும் எனும் புதிய விதி அமுலுக்கு வந்துள்ள நிலையில், மகேந்திர சிங் தோனியின் 7-ஆம் இந்திய அணி வீரர்கள் யாருக்கு அளிக்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது!
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகள் பலவற்று முறியடித்து வரும் விராட் கோலி, மேலும் ஒரு சாதனையினை மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான நடப்பு தொடரில் முறியடிக்கவுள்ளார்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பந்துவீச்சாளர் அஸ்வினை, தினேஷ் கார்த்திக் தமிழில் பேசி உற்சாகப்படுத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!
இலங்கை அணி இந்தியாவில் 6 வார கால சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறது. இலங்கைக்கு எதிராக விளையாடும் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா தென்னாப்பிரிக்காவுடன் மூன்று போட்டிகள் கொண்ட 'மகாத்மா காந்தி - நெல்சன் மண்டேலா' டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. மேலும் ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் சர்வதேச தொடரிலும், மூன்று டி 20 போட்டியிலும் விளையாடும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியும்,
2-வது டெஸ்டில் இந்தியா அணியும் வெற்றி பெற்றதுள்ளது. இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் விலகியுள்ளார்.
கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட தால் மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விளையாட மாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் இரண்டு போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.வருகிற 17-ம் தேதி மும்பையில் ஆஸ்திரேலிய அணி மற்றும் இந்திய ‘ஏ’ அணி பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. ஆஸ்திரேலிய அணி நேற்று மும்பை வந்தது. தெற்கு மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆஸ்திரேலிய அணியினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் பிப்., 23-ம் தேதி
2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் மார்ச் 4-ம் தேதி
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.