மெரினாவில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 63 எம்எல்ஏக்கள், 3 எம்.பி.க்கள் உள்பட 2 ஆயிரம் திமுகவினர் மீது மெரீனா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் வெல்லும் இது சரித்திரம் என்றார் ஓ. பன்னீர்செல்வம்.
தர்மம் வெல்வதற்கு காலம் உள்ளது என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறினர். எம்எல்ஏக்களை அவரவர் தொகுதிக்கு அனுப்பி வையுங்கள், எம்எல்ஏக்கள் அவர்களை சந்தித்து விட்டு வாக்களிக்கட்டும் என்று கோரினோம். ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரினோம். ஆனால் அதற்கு சபாநாயகர் ஒத்துக்கொள்ளவில்லை. திமுக சட்டசபை உறுப்பினர்களை பலவந்தமாக வெளியேற்றினர்.
திமுக சட்டசபையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அவருடன் துரைமுருகன் உள்ளிட்ட 9 திமுக எம்.எல்.ஏ.,க்கள் உடன் சென்றுள்ளனர்.
கடும் எதிர்பார்ப்புக்கு இடையில் சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது. தொடங்கியது சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. சட்டசபை கூடியதும் சபாநாயகர், சபை கூடியதற்கான காரணங்களை தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் அணியின் கொறடா செம்மலை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சட்டசபையில் நடக்கும் வாக்கெடுப்பில் ஆதிமுகவின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வாக்களிப்பார்கள் என அக்கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோருகிறது. கூவத்தூரில் இருந்து ஆதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர்கள் கார்களில் பலத்த பாதுகாப்புடன் வந்துள்ளனர்.
ஒவ்வொரு அமைச்சரின் காரிலும் சுமார் 5 எம்.எல்.ஏக்கள் வரை அடைத்து வைத்துக் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. மொத்தம் 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தமக்கு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தாலும் மயிலாப்பூர் நட்ராஜ், கோவை வடக்கு அருண்குமார் ஆகியோர் ஆதரவு இல்லை என அறிவித்துவிட்டனர்.
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் நடந்தது. இதில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் நரசிம்மன், “முன்னாள் முதல் - அமைச்சர் கருணாநிதி பெயரை குறிப்பிட்டு பேசி னார்.இதற்கு தி.மு.க. உறுப் பினர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே சபாநாயகர் குறுக்கிட்டு: தி.மு.க. உறுப்\பினரின் பெயரை மாண்புமிகு கருணாநிதி என்று மரியாதையுடன்தான் குறிப்பிட்டார். இதில் தவறு ஒன்றும் இல்லை என்றார்.
உடனே துரைமுருகன் எழுந்து: முதல்-அமைச்சர் பெயரை நாங்கள் குறிப்பிட்டு பேசலாமா? என்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.