கோடக் மகிந்தரா வங்கி மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தனியார் வங்கியாகும். அதிக சந்தை மதிப்பு கொண்ட வங்கிகள் பட்டியலில் (எஸ்பிஐ) பாரத ஸ்டேட் வங்கியை பின்னுக்கு தள்ளி கோடக் மகிந்தரா வங்கி 2வது இடத்தை பிடித்துள்ளது.
நாட்டின் பிரதான வங்கிகளில் ஒன்றான SBI, தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்புத்தொகை வைத்திருப்பதிற்கான புதுநிபந்தணைகளை கொண்டுவந்துள்ளது!
பாரத ஸ்டேட் வங்கியின் புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக தற்போது இருக்கும் அருந்ததி பதாச்சாரியாவின் பதவிக்காலம் இந்த மாதம் 7-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த சில மாதமாக அமைச்சரவை ஆலோசித்து வந்தது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமைச்சரவையின் நியமன குழு இன்று அறிவித்தது.
இதையடுத்து பாரத ஸ்டேட் வங்கியின் புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைவர் பொறுப்பில் 3 ஆண்டுகள் பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போரட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ளன.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இன்று தமிழகத்தில் அனைத்து வங்கி கிளைகளும் மூடப்படுவதால் வங்கி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாளை (ஆகஸ்ட் 22) நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்த போவதாக வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த 19-ம் தேதி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாததால் திட்டமிட்டப்படி நாளை வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் கூறுகையில்:-
வரும் ஆகஸ்ட் 22-ம் நாள், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்த போவதாக வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகள் தனியார் மையமாக்கப்பட கூடாது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் 22-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
9 வங்கி யூனியன்கள் (AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF, INBOC, NOBW, NOBO) இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் இயந்திரத்தின் மூலம், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு, டெபிட் கார்டு பின் எண் போன்றவை திருடப்பட்டிருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 30 லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களில் சுமார் 20 லட்சம் பேரின் டெபிட் கார்டுகளை முடக்கியுள்ளது. ஏடிஎம் மையங்கள் மல்வாரே தாக்கி பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
கடந்த ஜூலை மாத நிலவரப்படி, எஸ்பிஐ மற்றும் அதன் துணை வங்கிகள் சார்பாக, நாடு முழுவதும் 4.75 கோடி டெபிட் கார்டுகள் தரப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.