பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வருவதால் தமிழக அரசுக்கு கூடுதலாக வரி வருவாய் கிடைக்கிறது. அதில் ஒரு பகுதியை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக குறைக்கலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லியில் நடப்பது தான் மக்கள் நல அரசு. தமிழகத்தில் வீடு தேடி சென்று லஞ்சம் வாங்கும் சேவை மட்டும் தான் நடைமுறையில் உள்ளது என பாமக நிறுவனர் ராமதாசு அவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்!
சம்பா பயிர்கள் கருகி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டாலும் பரவாயில்லை, மணல் கொள்ளை தடையின்றி நடக்க வேண்டும் என்று நினைப்பது மக்கள் நல அரசாக இருக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் குட்கா விற்பனைக்காக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கையூட்டு பெற்றது நிரூபணம் ஆன நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக அரசின் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஒப்புதல் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளார்.
பாலாற்று நீர் தமிழகத்துக்கு வருவதைத் தடுக்கும் வகையில் புதிய தடுப்பணையை ஆந்திரா கட்டி வரும் நிலையில் அவற்றை தமிழக அரசு தடுக்காதது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
லோக் அயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகி விட்ட நிலையில், அச்சட்டத்தின்படி லோக் அயுக்தா அமைப்பை தமிழக அரசு அமைக்காதது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டிய கல்லூரிகள் ஆபத்தான இடமாக மாற்றப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை எது வாங்க வேண்டுமானாலும் கையூட்டுக் கொடுத்தாக வேண்டும் என்பது தமிழகத்தில் எழுதப் படாத சட்டமாகி விட்டது. எனவே இந்தப் பிரச்சினைக்கான் ஒரே தீர்வு சேவை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்தின் தூதராக மாறி தமிழகத்துடனும் பேச்சு நடத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், வெண்கல சிலை நிறுவப்படும் என தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்!
இந்திய அரசியல் தலைவர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். சுதந்திர இந்தியாவில் நடத்தப்பட்ட 15 தேர்தல்களில் 13 தேர்தல்களில் பங்கேற்றவர் கலைஞர் கருணாநிதி. இந்த 13 தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே மக்களின் தீர்ப்பாய் பெற்ற தலைவர் கருணாநிதி.
திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவினை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.