புதுச்சேரியில் கவர்னர்ரான கிரண்பேடி முதல் அமைச்சர் நாராயணசாமியுடன் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் முறையிட்டுள்ளார்.
புதுச்சேரியில் மருத்துவ முதுகலை படிப்புக்கான கலந்தாய்வின்போது புதுச்சேரி துணைநிலை கவர்னராகப் பதவி வகிக்கும் கிரண் பேடி அதிரடியாகச் செயல்பட்டார். அப்போது, மருத்துவக் கலந்தாய்வு நேர்மையாக நடைபெறவில்லை என்றும், புதுச்சேரி முதல்வரின் ஆட்சி குறித்தும் கிரண் பேடி சமூக வலைதளத்தில் புகார்கள் பதிவிட்டு வந்தார்.
இறைச்சிக்காக பசு, காளை, கன்று, ஒட்டகம் விற்கக் கூடாது என்று மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
மத்திய அரசின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. மாட்டு இறைச்சி விற்பனையை தொடர தனிச்சட்டம் கொண்டு வந்து பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரளா மற்றும் புதுச்சேரி அரசு கூறி உள்ளது.
மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை என்ற மத்திய அரசின் சட்டத்தை புதுச்சேரியில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பசு, காளை, கன்று, ஒட்டகம் இறைச்சி விற்கப்படுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவாதங்கள் நடைபெற்றன.
அப்பொழுது முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:-
மாட்டு இறைச்சிக்கு எதிராக மத்திய அரசு தடை விதித்ததை புதுச்சேரி அரசு சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். யார் என்ன உணவை உண்ண வேண்டும் என்பதை மத்திய அரசு வற்புறுத்த இயலாது. நாடு முழுவதும் 40 சதவீத மக்கள் அசைவ உணவு உண்பவர்கள்.
புதுச்சேரியில் நிலவும் கடும் வெயில் காரணமாக ஏப்ரல் 22-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளையும் மூட புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று புதுச்சேரி கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஏப்ரல் 22-ம் தேதி முதல் மூடப்படும் என அந்த அறிக்கையில் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையின் போது ஏற்பட்ட மின்தடையால் 3 நோயாளிகள் பலி
புதுச்சேரி அரசு மருத்துமனையில் ரத்தசுத்திகரிப்புச் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்ட சுசீலா (77), அம்சா (55), கணேஷ் (54) ஆகிய மூன்று பேருக்கு இன்று சிகிச்சை நடத்தப்பட்டது. நோயாளிகளுக்கு இயந்திரம் மூலம் ரத்த சுத்திகரிப்பு நடக்கும் போது மின்சாரம் மருத்துவமனையில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.
வளமான புதுச்சேரி என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் பதவியேற்று பிறகு அனைத்துத் துறை செயலர்கள், உயர் அதிகாரிகளை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளாக புதுவையில் சிறப்பான நிர்வாகத்தை இழந்து விட்டது. மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் சரியாக செயல்படுத்தப்படவில்லை.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
புதுச்சேரி மாநில சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் சபாநாயகராக வைத்தியலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சர்கள் உள்ளிட்டோர் வைத்தியலிங்கத்தை இருக்கையில் அமர வைத்தனர். புதுச்சேரி மாநில துணை சபாநாயகராக சிவக்கொழுந்து பதவியேற்றார்.
தழகத்தில் இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக பதிவான வாக்குப்பதிவு 73.76 சதவீதம் ஆகும். வாக்குப்பதிவு முடிந்ததும்
மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு 5 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ள 68 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 9 மணி முதல் நிலவரம் தெரியவரும்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் ரங்கசாமி மோட்டார் சைக்கிளில் வந்து திலாசுபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி அமைக்க பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
பிறகு நிருபர்களிடம் பேசிய அவர் "கடந்த ஆண்டு நாங்கள் வெற்றி பெற்று தங்கள் அரசு மக்களுக்காக செயல்பட்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. இம்முறையும் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு மக்கள் அளிப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார்..
கிடைத்த தகவல் படி புதுச்சேரியில் 12 மணி வரை 32.16% வாக்குப்பதிவாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.