Lungs Detox: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு, புகைபிடிக்கும் பழக்கம் போன்றவை காரணமாக, பலருக்கு நுரையீரல் பலவீனமாக உள்ளது. இதனால், சுவாசிப்பதில் சிரமம், அடிக்கடி ஏற்படும் சளி இருமல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.
மோசமான வாழ்க்கை முறையுடன், மரங்களை வெட்டுவது, மக்கள் தொகை பெருக்கம் என பல காரணங்களால் காற்று மாசுபாடும் அதிகரித்து ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், வரும் தலைமுறையினரின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி, அதனை ஆரோக்கியமாக வைத்திருக்க, சில மூலிகை டீயை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்வது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தரும்.
நுரையீரை டீடாக்ஸ் செய்து வலுப்படுத்தும் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த மூலிகை டீ வகைகளை அறிந்து கொள்ளலாம்.
இஞ்சி டீ
இஞ்சி பல சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த ஒரு அற்புத மசாலா மற்றும் மூலிகை. இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் சுவாச பிரச்சனைகளை போக்க வல்லது. இஞ்சி டீ சுவாசக் குழாயின் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிப்பதன் மூலம் நுரையீரலுக்கு நன்மை பயக்கும் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. நுரையீரலை இயற்கையாக டீடாக்ஸ் செய்து ஆரோக்கியமாக (Health Tips) வைத்திருக்க இஞ்சி டீ குடிப்பதை வழக்கமாக கொள்ளவும். இதனுடன் சுவைக்காக எலுமிச்சை மற்றும் தேன் சேர்க்கலாம்
அதிமதுரம் டீ
ஆயுர்வேதத்தில், அதிமதுரம் இருமல், தொண்டை புண் மற்றும் மூச்சுக்குழாய் தொற்றுகளைக் குறைக்க சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் இருமல் நிவாரணப் பண்புகளைக் கொண்டுள்ளது, எனவே குளிர்காலத்தின் குளிர் வெப்பநிலையைத் தவிர்ப்பதற்கும், ஆரோக்கியத்தில் காற்று மாசுபாட்டின் தீய விளைவுகளிலிருந்து பாதுகாப்பதற்கும் லைகோரைஸ் டீ குடிப்பது நன்மை பயக்கும்.
புதினா டீ
புதினா டீ சுவாச பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், உங்கள் மனநிலையை மேம்படுத்தவும், பதற்றத்தை தணிக்கவும் உதவுகிறது. புதினா டீ குடிப்பதால் புத்துணர்ச்சி ஏற்படும். இந்த தேநீர் சுவாசப்பாதையின் தசைகளை தளர்த்துகிறது. இதன் காரணமாக சுவாசிப்பதில் உள்ள பிரச்சனைகள் நீங்குகிறது.
யூகலிப்டஸ் டீ
யூகலிப்டஸ் தேநீர் நுரையீரலை சுத்தம் செய்யவும், காற்று மாசுபாட்டின் பாதிப்புகளை எதிர்த்துப் போராடவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மூலிகை தேநீர் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. யூகலிப்டஸ் எண்ணெய் சுவாச பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் வழங்கவும் உதவுகிறது. மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஜலதோஷம் ஏற்பட்டால் கூட இந்த மூலிகை டீயை குடிக்கலாம்.
மேலும் படிக்க | எடை இழப்பு முதல் செரிமானம் வரை: ஆரோக்கியத்தை கச்சிதமாய் காக்கும் ஓமம்
சில காலத்திற்கு முன்பு, டெல்லியின் பல இடங்களில் AQI 400 என்ற அளவைத் தாண்டியது. காற்றில் கரைந்துள்ள நச்சுத் துகள்கள் உடலுக்குள் நுழைந்து சுவாசப் பிரச்சனைகளை அதிகம் தூண்டும். ஏற்கனவே ஆஸ்துமா உள்ளவர்கள் இன்னும் அதிகமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | செரிமானம் முதல் சளி, இருமல் வரை: குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி டீ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ