ரஜினிகாந்த் இலங்கை செல்வதில் எந்த தவறும் இல்லை என பாஜக மூத்த தலைவரும், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் சுமார் 150 வீடுகள் கட்டப்பட்டு, அவை தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் விழா யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அந்த நிகழ்விற்கு நடிகர் ரஜினிகாந்த் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேலத்தில் மத்திய அமைச்சர் பொன்னார் மீது காலணி வீசியதால் பரபரபப்பு ஏற்பட்டது.
டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் பிஎச்டி படித்து வந்த ஜே.என்.யூ. மாணவர் முத்துக்கிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவரது உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, பிறகு ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் அரிசிபாளையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டம் குழுவில் மக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து பாஜகவின் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் சரி, ஒரு திட்டத்தை முன் வைக்கும் போது அதை ஆழமாக சிந்தித்து, பரிசீலனை செய்ய வேண்டும். அந்த திட்டத்தினால் கிடைக்கப்போகும் பயன்கள் என்ன, திட்டத்தினால் விளையப்போகும் தீங்கு என்ன என்பதை சீர்தூக்கு பார்க்க வேண்டும்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார்.
சந்திப்புக்கு முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று நாளை திமுக போராட்டம் நடத்துகிறது. எதிர்க்கட்சி என்ற முறையில் போராடுகிறார்கள். போராட்டம் நடத்தித்தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியுமென்றால் நானும், பா.ஜனதாவும் முதலாவதாக போராடுவோம். ஆனால் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி, விரைவில் நலம்பெற வேண்டுவதாக, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்றி இரவு உடல்குறைவு காரணத்தால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நலத்துடன் உள்ளதாக, மருத்துவமனை தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்தார்.
முதல்வர் ஜெயலலிதா, இன்று காலை, 11:00 மணிக்கு, தலைமைச் செயலக வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், 197 புதிய அரசு பஸ்களை, கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, 11:30 மணிக்கு, சென்னை விமான நிலையம் - சின்னமலை இடையிலான, மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் துவக்கி வைத்தார்.
சென்னையில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் மேம்பாலம் பணிகள் முடிந்தன. அங்கு கடந்த ஆண்டு முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் பாதை பணி கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது. அந்த பாதையில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து சின்ன மலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில்களை இயக்கலாம் என்று கடந்த மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் வழங்கினார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலா மாண்டு நினைவு நாளில் அவரது வெண்கல சிலை திறக்கப்பட்டது. மேலும் அறிவுசார் மையம், மணிமண்டபம் ஆகியவை அமைப்பதற் கான அடிக்கல் நாட்டப் பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.