ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் மானுசா நாணயக்கார தனது பதவியினை ராஜினாமா செய்வதாக அதிபர் சிறிசேனாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்!
இலங்கையில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நடைப்பெற்றுள்ளது!
தெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இலங்கை பெற்றோலியத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்
இந்திய உளவுத்துறை 'RAW' தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக'' இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா குற்றம்சாட்டியதாக வெளியான செய்திக்கு ஒன்றை இலங்கை அரசு மறுப்பு...
காட்மண்டு BIMSTEC அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அவர்கள் இலங்கை தமிழர்கள் வாழ்வாதாரம் குறித்து அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்!
கடந்த சில தினங்களாக இலங்கையில் புத்த மத பிரிவினருக்கும், சிறுபான்மை இன மக்களான இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு கடம் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
ஐ.நா.,வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மூன்று நாட்கள் சுற்று பயணமாக நேற்று இரவு இலங்கை தலைநகர் கொழும்பு வந்தடைந்தார். இலங்கை வந்துள்ள பான் கீ மூன் இன்று இரவு அந்நாடு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங், எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். நாளை மறுதினம் யாழ்பாணம் சென்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இங்கிலாந்தில் நடைபெற்ற மாநாட்டை முடித்துக்கொண்டு இன்று இந்தியா வருகிறார். பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.
அதன் பிறகு மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற புத்த மத வழிபாட்டு தளத்தில் இலங்கை மகாபோதி சொசைட்டி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இந்தியா வந்து இருப்பது இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று அமைச்சர் விகாஸ் ஸ்வருப் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.