இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இங்கிலாந்தில் நடைபெற்ற மாநாட்டை முடித்துக்கொண்டு இன்று இந்தியா வருகிறார். பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.
அதன் பிறகு மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற புத்த மத வழிபாட்டு தளத்தில் இலங்கை மகாபோதி சொசைட்டி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இந்தியா வந்து இருப்பது இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று அமைச்சர் விகாஸ் ஸ்வருப் தெரிவித்தார்.
இலங்கை அதிபரின் வருகையை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மத்தியப்பிரதேச மாநில அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளது.