ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய நிலையில், தமிழே இந்தியாவின் இணைப்பு மொழி என இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்து உள்ளார்.
இந்தி மொழியை இணைப்பு மொழியாக கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்துக்கு பதிலடியாக தமிழ் தான் இணைப்பு மொழி என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
காசு படைத்தவர்கள் இந்தி மொழியை கற்றுக் கொண்டு, வாய்ப்புகளை பெருக்கி கொள்ளும் போது, அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை மறுக்கும் வகையில், மும்மொழிக் கொள்கையை எதிர்த்து வருகிறது திமுக கட்சி.
இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
வேறு ஒரு மொழி கற்க வேண்டும் எனில் இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என்றுதான் தான் கூறியதாக, தனது சர்ச்சை கருத்துக்கு விளக்கமளித்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!
இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில், "இந்தி திணிப்பை எதிர்த்து வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களால் இந்தி மொழிக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், திருச்சியில் உள்ள இந்திய தபால் அலுவலகம் மற்றும் BSNL அலுவலகம் பெயர் பலகையில் இருந்த இந்திய எழுத்துகளை மர்ம நபர்கள் மை கொண்டு அழித்துள்ளனர்!
புதிய வரைவு திட்டத்தின்படி தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயப்படுத்தல் தொடர்பான பரிந்துறையில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது!
இந்தித் திணிப்பை எதிர்த்து 1965 மொழிப் போராட்டத்தை விட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் என்பதை இந்தி எதிர்ப்புப் போரில் களம் கண்டவன் என்ற முறையில் எச்சரிக்கிறேன் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.