இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்.
ஜெயம்ரவி 1980 செப்டம்பர் 1௦ பிறந்தார். {37} இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் இயக்குனர் எம். ராஜாவின் தம்பியும் ஆவார்.
இவரின் இயற்பெயர் ரவி மோகன். ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார்.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது. டி-20 கிரிக்கெட் போட்டியை 1-0 கணக்கில் இந்தியா வென்றது.
இலங்கைக்கு எதிரான ஒட்டுமொத்தத் தொடரையும் 9-0 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியை முழு ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி.
இலங்கை சுற்றுப்பயணம் முடித்துக்கொண்டு திரும்பிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.
மதுரை அகர்வால் கண் மருத்துமனையின் கிளையை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட விஜய் சேதுபதி தனது தனது கண்ணை தானம் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.
ரஜினியை சந்திக்க வரும் ரசிகர்கள் கண்டிப்பா க்யூஆர் கோடு அடையாள அட்டை உடன் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதி என ரஜினிகாந்த் மன்ற நிர்வாகியான சுதாகர் கேட்டுக்கொண்டு உள்ளார் வரும் 15-ம் தேதி முதல் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். அந்த சந்திப்பின் போது ரசிகர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகி சுதாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜின்காந்த் முடிவு செய்தார். ஆனால் சில காரணங்களால் அந்த நிகழ்சி திடீர் என்று ரத்து செய்யப்பட்டது. அதற்கான விளக்கத்தையும் அப்பொழுது ரஜினி கூறியிருந்தார்.
இந்நிலையில், ரசிகர்களை சந்திக்க ரஜினி நாள் ஒதுக்கி உள்ளார். அதாவது வரும் 15-ம் தேதி முதல் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். அந்த சந்திப்பின் போது ரசிகர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரஜினி ரசிகர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் 31-ம் தேதி நடைபெற உள்ளது.
ரஜினி ரசிகர் மன்றத்தில் மாநில பொறுப்பாளராக இருக்கும் சுதாகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலேசனை நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் மற்றும் செயலாளர் சென்னை வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
‘கபாலி’ நேற்று ரிலீஸ் ஆனது. இதை ரசிகர்கள் திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர்.
முதல் நாளில் ரஜினி படத்தை பார்க்க ‘கபாலி’ டிக்கெட் வாங்க ஆயிரக்கணக்கானோர் அலை மோதினார்கள். ‘டிக்கெட்’ என்ன விலை என்றாலும் படம் பார்த்தே தீர்வது என்பதில் பெரும் பாலானோர் உறுதியாக இருந்தனர்.
இந்த ஆட்டம் டிராவில் முடிந்ததைத் தொடர்ந்து மைதானத்திற்கு வெளியே ரகளையில் ஈடுபட்ட இங்கிலாந்து மற்றும் ரஷ்ய ரசிகர்கள் ஆட்டம் முடிந்ததும் மைதானத்திற்குள்ளும் வன்முறையில் குதித்தனர். இரு தரப்பினரும் மோதிக்கொண்டதுடன், ஒருவரையொருவர் பாட்டில்களாலும், நாற்காலிகளாலும் தாக்கிக்கொண்டனர். கேலரியின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் இவர்களை கலைத்தனர்.
தனது 17-ம் ஆண்டு திருமண நாளைச் சமீபத்தில் கொண்டாடினார் நடிகர் மாதவன். அதற்கு மாதவனின் ரசிகர் ஒருவர், லெஜண்டுக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று பதிவிட்டு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த மாதவன்:- உங்களுக்கு என்னுடைய நன்றிகள். நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் லெஜண்ட் இல்லை சகோதரா. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இன்னமும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு நடிகன்தான் என்று கூறியுள்ளார்.
ராஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள "கபாலி" ஜுலை 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த மாதம் ஜுன் 9-ம் தேதி பாடல்களை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது கபாலியின் பாடல்கள் வெளியீட்டை ஜுலை 12-ம் தேதிக்கு மாற்றியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.