மகாராஷ்டிராவில் சிவசேனாவுடனான கூட்டணி குறித்து திட்டவட்டமான பேச்சு எதுவும் இல்லாததால், சிவசேனா உதவியின்றி ஓரிரு நாட்களில் அரசாங்கத்தை அமைக்க பாரதிய ஜனதா கட்சி திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹரியானாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 90 MLA-க்களில் 17 பேர் குற்றப்பதிவு கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் 7 பேர் கடுமையான குற்றப்பதிவு வைத்திருப்பதாகவும் தெரிகிறது.
கேரள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வட்டியூர்காவூ, கோனி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளை ஆளும் இடதுசாரி கூட்டணி கைப்பற்றியது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான இவ்விரு தொகுதிகளும் இடதுசாரி கூட்டணி வசம் சென்றது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைதேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 15.10.2019 மற்றும் 16.10.2019 அன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்ட அதிமுகவுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில், பாஜக வெற்றி பெற வேண்டுமெனில், புல்வாமா போன்ற தாக்குதல்கள் மட்டுமே கைகொடுக்கும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்!
பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இருந்து பிகாரை தவிர மற்ற மாநிலங்களில் விலகுவதாக ஐக்கிய ஜனதா தள் தலைவரும், பிகார் முதல்வருமான நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.