பீகார் முதல்வராக நிதிஷ்குமார் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்றார். நிதிஷ் மற்றும் சுஷில் மோடி இருவர் மட்டுமே இன்று பதவியேற்ப்பு. பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ள கவர்னர், நிதிஷ் குமார் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 2 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.
பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் மாநில முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் திரிபாதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பிசிசிஐ-யின் நிர்வாகிகள் குழுவிலிருந்து விலகுவதாக ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக, நீதிபதி லோதா தலைமையில் சுப்ரீம் கோர்ட் குழு ஒன்றை அமைத்தது.
லோதா குழுவின் பரிந்துரையின் பெயரில், ஜனவரி 30-ம் தேதி பிசிசிஐ-க்கு நிர்வாகிகளை சுப்ரீம் கோர்ட் நியமனம் செய்தது. அதன்படி, இந்திய அரசின் ஆடிட்டர் வினோத்ராய், பிசிசிஐ-யின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மேலும், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட நான்கு நிர்வாகிகளை பிசிசிஐ-க்கு உச்சநீதிமன்றம் நியமனம் செய்தது.
சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ஷசாங் மனோகர் இன்று ராஜினாமா செய்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த ஷசாங் மனோகர் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில், தன்னுடைய பதவியிலிருந்து இன்று அவர் ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து சர்வதேச கிரிக்கெட் சங்கம் கூறியதாவது:-
நாகாலாந்து மாநிலத்தில் அசாதரணமான அரசியல் சூழல் நிலவி வருவதால், அம்மாநில முதலமைச்சர் திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.
நாகாலாந்து மாநிலத்தில், பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வகையில் 33 சதவிகித இட ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் டி.ஆர்.ஜெலியாங் தலைமையிலான அரசு உத்தரவிட்டது.
டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நஜீப் ஜங் தனது துணை நிலை கவர்னர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார், இதற்காக தனது ராஜினாமா கடிதத்தை மத்திய அரசிடம் அளித்துள்ளார்.
கர்நாடக கலால் துறை அமைச்சராக இருப்பவர் எச்.ஒய்.மேட்டி. பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.
பணியிடமாற்றம் கேட்டு வந்த பெண்ணுடன் கலால்துறை அமைச்சர் எச்.ஒய்.மேட்டி (71) உடலுறவு கொள்ளும் காட்சி அந்த மாநில செய்தி சேனல்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் மாநிலம் முழுவதிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனக்கு பாலியல் தொந்தரவு
வெங்கடேச பண்ணையாரின் 13-வது நினைவு நாளை முன்னிட்டு சசிகலா புஷ்பா அவர்க்கு அஞ்சலி செலுத்தினார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சொன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன். ஆனால் அவருக்கு பின்னால் இருக்கும் இன்னொருத்துற்காக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.
குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஆனந்திபென் பட்டேல், இன்று முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை குஜராத் மாநில கவர்னரிடம் ஒப்படைத்தார். அதனை பெற்றுக் கொண்ட கவர்னர் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்துள்ளார்.
குஜராத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் டில்லியில் பிரதமர் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் நிலவிவரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவை விமர்சித்து தனது பதவியை ராஜினாமா செய்யுங்கள் என மாயாவதி கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.