இன்று பிரதமர் மோடி தனது 67_வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல தலைவர்கள் வாழ்த்துக் கூறியுளனர்.
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி பாஜக-வினர் தூய்மை இந்தியா திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள தனது தாயார் ஹிராபாயை சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்தார். இந்த ஆணை ரூ.16,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. உலகின் 2_வது மிகப்பெரிய அணையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று பாஜக சார்பில் நடைபெறும் இரண்டு பேரணியில் கலந்துக் கொள்கிறார்.
மியான்மர் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அரசு ஆலோசகரான ஆங் சான் சூ கியை இன்று சந்தித்தார்.
பிரதமர் நரேந்திர சீனாவில் இருந்து மூன்று நாள் அரசுமுறை பயணமாக நேற்று மியான்மர் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
தலைநகர் நய் பியி டாவில் பிரதமர் மோடிக்கு, மியான்மர் அதிபர் ஹிடின் கியாவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் முப்படையினர் அளித்த மரியாதையை மோடி ஏற்றுக்கொண்டார். மியான்மரில் நாளை வரை பிரதமர் மோடி தங்குகிறார்.
‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு சீனாவில் நடந்து வருகிறது. இதில் உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்றுள்ளன.
2-வது நாளான நேற்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பயங்கரவாத குழுக்கள் பற்றி பிரதமர் மோடி பேசினார். மேலும் பயங்கரவாதம் மிகுந்த கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது. பயங்கரவாதத்தில் ஈடுபடும் அமைப்புகளுக்கு தக்க பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்க இந்த அமைப்பு(‘பிரிக்ஸ்’ ) முடிவு செய்துள்ளன என பேசினார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களுக்கு தனது பக்ரீத் வாழ்த்து செய்தியினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்
Best wishes on Id-ul-Zuha. May the spirit of harmony, brotherhood and togetherness be furthered in our society.
— Narendra Modi (@narendramodi) September 2, 2017
9_வது பிரிக்ஸ் உச்சி மாநாடு சீனாவின் புஜியான் மாகாணத்தில் அமைத்துள்ள ஜியாமென் நகரில் நடைபெறும்.
டோக்லாம் பிரச்சனை முடிவடைந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திரா மோடி, சீனாவில் செப்டம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெறும் 9_வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார் என வெளிவிவகார அமைச்சுகம் தெரிவித்துள்ளது.
இந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய உறுப்பு நாடுகள் கலந்து கொள்கின்றன.
ரக்ஷா பந்தன் பண்டிகையை ‘ராக்கி’ என்றும் அழைப்பர். இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர். ‘ரக்ஷா பந்தன்’ என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் பொருள்.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பதவி ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கிகால் பறிக்கப்பட்டது. பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து அவர் பதவி விலகினார். தற்போது பாகிஸ்தான் பிரதமர் பதவி காலியாக உள்ளதால் அப்பதவிக்கான தேர்தல் இன்று நடக்கவுள்ளது என பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசேன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் பதவி வேட்பாளராக, நவாஸ் ஷெரீப் தனது தம்பி ஷாபாஸ் ஷெரீப்பை அறிவித்துள்ளார்.
அவரை எதிர்த்து ஷேக் ரஷீத் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட உள்ளார். இதற்கான மனுதாக்கல் நேற்று மாலை நடைபெற்றது.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பதவி ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கிகால் பறிக்கப்பட்டது. பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து அவர் பதவி விலகினார். தற்போது பாகிஸ்தான் பிரதமர் பதவி காலியாக உள்ளதால் அப்பதவிக்கான தேர்தல் நாளை (ஆகஸ்ட் 1) நடக்கவுள்ளது என பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசேன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் பதவி வேட்பாளராக, நவாஸ் ஷெரீப் தனது தம்பி ஷாபாஸ் ஷெரீப்பை அறிவித்துள்ளார்.
அவரை எதிர்த்து ஷேக் ரஷீத் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட உள்ளார். இதற்கான மனுதாக்கல் இன்று மாலை நடைபெறுகிறது.
இன்று பீகார் மாநில முதல்வராக தவியேற்ற நிதிஷ் குமார், பிரதமருக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இன்று பீகார் மாநில முதல்வராக மீண்டும் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வராக பாஜகவின் சுசில் குமார் மோடி பதவியேற்றனர். இவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய பீகார் மாநில முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமார், வாழ்த்துக்கள் கூறிய பிரதமருக்கு தனது நன்றிகளை தெரிவித்தார். ஊழல் விவகாரத்தில் எந்தவித சமரசமும் இல்லை. மத்திய அரசின் ஒத்துழைப்புடன் நிச்சயமாக பீகார் மாநிலத்தை முன்னோக்கி கொண்டு செல்வோம் என அவர் கூறினார்.
தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி தமிழக அமைச்சர்கள் இன்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார்கள்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியது,
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படுமா? என்பது குறித்து தற்போது உறுதியாக கூறமுடியாது. தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தர பிதரமரிடம் வலியுறுத்தப்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவதாக கூறினார்.
தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டு வர இருக்கும் அநீதியான சட்டத்தை திரும்பப் பெற அழுத்தம் தர வேண்டும் என்று மத்திய அரசை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
பாராளுமன்ற மைய மண்டபத்தில் நள்ளிரவில் அறிமுக விழா சரக்கு, சேவை வரி அமலுக்கு வந்ததுநாட்டில் முதன் முதலாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்க வகை செய்யும் ஜிஎஸ்டி இன்று நள்ளிரவு முதல் அமலானது.
பாராளுமன்றத்தில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும் சேர்ந்து இதனை தொடங்கி வைத்தனர்.
திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், நதி நீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றிட பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை பள்ளிகரணையில் திமுக சார்பில் குளம் தூர்வாரும் பணியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்:-
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் திமுக சார்பில் குளங்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. குளங்கள் தூர்வாரப்படுவதற்கு அந்தந்த பகுதி மக்கள் ஆதரவும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர். திமுக-விற்கு புகழ் வந்துவிட கூடாது என்ற நோக்கில் சில அரசியல் கட்சிகள் இதனை விமர்சித்து வருகின்றன.
இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரதமர் மோடியிடம் முக்கிய கோரிக்கை மனுவை கொடுத்தார்.
அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டதாவது:-
* தமிழ்நாட்டின் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையும் மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகையும் முழுமையாக வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ஏற்கனவே கடந்த வாரம் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து தமிழக மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை பத்திரத்தை பிரதமரிடம் அளித்தார். இந்நிலையில், தற்போது பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவது தமிழக அரசியலில் அடுத்த என்ன மாற்றம் நிகழும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக-வுடன் எப்போது கூட்டணி வைக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பாஜகவுடன் கூட்டணி குறித்து கலந்தாலோசித்து அறிவிப்போம் என தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து பிரதமர் அவர்களிடம் எடுத்துக் கூறியதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இன்று பிரதமரை நேரில் சந்தித்து அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து பிரதமர் திரு @narendramodi அவர்களிடம் எடுத்துக் கூறினோம்.
பிரதமர் நரேந்திர மோடியை ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி இன்று சந்தித்து பேசினார்.
அங்கு சமீபத்தில் நடந்த ஸ்ரீநகர் எம்.பி. இடைத் தேர்தலில் அதிக அளவு வன்முறை சம்பவம் நடந்தது. குறைந்த அளவு வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பி.டி.பி வெற்றி வாய்ப்பை இழந்தது. மேலும் காஷ்மீரில் புதிய கலவரங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. கல்எறியும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
ராணுவ வீரர்களுக்கு எதிராக இளைஞர்கள் தொடர்ந்து கல்வீசி வருகிறார்கள். அப்பாவிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டி இந்த கல்வீச்சு சம்பவம் நடக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.