காஷ்மீரின் எல்லைக் கோட்டை ஒட்டிய பகுதிகயில் அமைந்துள்ள நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் நவ்சேரா பகுதியில் பொது மக்கள் 2 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர்.
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்சேரா பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகள், இந்திய பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு இந்திய படைகளும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றன.
பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பதுங்கு குழிகளை, இந்திய ராணுவம் ஏவுகணை வீசி தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த தாக்குதல் எப்போது நடத்தப்பட்டது என தெரியவில்லை. ஆனால் கடந்த வாரம் 2 இந்திய பாதுகாப்பு படை வீரர்களை கொன்று, அவர்களின் உடலை பாக்., கொடூரமாக சிதைத்ததற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்திய வீரர் இருவரின் உடல்களை சிதைத்த பாகிஸ்தான் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு படையினர், இந்திய எல்லையில் சுமார் 250 மீட்டர் தூரத்திற்கு உள்ளே புகுந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணகாட்டி என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ கூட்டு நடவடிக்கை அதிகாரி பரம்ஜித்சிங் மற்றும் எல்லை பாதுகாப்பு படை தலைமை ஏட்டு பிரேம் சாகர் என்ற இரு இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாகட்டி சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இன்று காலை சுமார் 8 மணியிலிருந்து அதிநவீன ராக்கெட்டுகள் தானியங்கி துப்பாக்கிகள், சிறிய ரக கைத்துப்பாக்கிகளால் இங்குள்ள இந்திய நிலைகளின்மீது ஆவேச தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் படையினருக்கு இந்திய வீரர்கள் சரியான பதிலடி கொடுத்து வருவதாக ஸ்ரீநகரில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மீண்டும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதையடுத்து பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப், உள்பட 22 சமூக வலைதளங்களை காஷ்மீர் அரசு அதிரடியாக தடை செய்துள்ளது. 22 சமூக வலை தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஒரு மாதம் அல்லது மறுஉத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்று அம்மாநில உள்துறை முதன்மை செயலாளர் ஆர்.கே. கோயல் தெரிவித்துள்ளார்.
குப்வாரா அருகே பன்ஞ்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
பாகிஸ்தான் எல்லை வழியாக இந்தியாவில் தாக்குதல் நடத்தும் நோக்கில் தீவிரவாதிகள் காஷ்மீர் பகுதிக்குள் நுழைகின்றனர். இதனால், எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை உன்னிப்பாக கவனித்து வரும் இந்திய ராணுவம் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் குப்வாரா பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டு பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தற்கொலைப்படை தாக்குதல் மூலம் ராணுவ நிலைகளுக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் முயற்சித்ததாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியின் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இன்று காலை சுமார் 8 மணியிலிருந்து அதிநவீன தானியங்கி துப்பாக்கிகள், சிறிய ரக கைத்துப்பாக்கிகளால் இங்குள்ள இந்திய நிலைகளின்மீது ஆவேச தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் படையினருக்கு இந்திய வீரர்கள் சரியான பதிலடி கொடுத்து வருவதாக ஸ்ரீநகரில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.
காஷ்மீர் ஸ்ரீநகர் தொகுதியில், கடந்த 9-ம் தேதி மக்களவை இடைதேர்தல் நடைபெற்றது. அந்த இடைத்தேர்தலில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு தொடர்ந்து பதற்றநிலை உருவானது. குறிப்பாக, இன்டர்நெட் சேவை முழுவதும் ரத்துசெய்யப்பட்டது அதன் பிறகு கடந்த 13-ம் தேதி இன்டர்நெட் சேவை மீண்டும் வழங்கப்பட்டது.
இதில் இளைஞர்கள் சிலர், ராணுவ வாகனத்தின் மீது கல் எறிந்து தாக்கியுள்ளனர். கல் எறிந்து தாக்கிய இளைஞர்களில் ஒருவரை ராணுவத்தினர் பிடித்து, வாகனத்தின் முகப்பில் கட்டிவைத்துள்ளனர். பின்னர், அவரை கேடயமாகப் பயன்படுத்தி, ஜீப்பை ஓட்டிச் சென்ற வீடியோ சர்ச்சையைக் கிளப்பியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியின்மையை நிலைத்திருக்க செய்ய பாகிஸ்தான் அரசு ஆதரவு பெற்ற தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்தியாவிற்கு நுழைய முயற்சி செய்கிறார்கள். அவ்வபோது அவர்களை இந்திய ராணுவம் வீரர்கள் வேட்டையாடுகிறது.
இன்று எல்லையில் கெரான் செக்டாரில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தார்கள், இந்திய ராணுவம் பலமுறை அவர்களை எச்சரித்தது, பின்னர் ஏற்பட்ட சண்டையில் 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சிறையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 14 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
வாட்ஸ்-அப் வலைதளம் மூலமாக பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு கொண்டு உள்ளனர் என்பதும் தெரியவந்து உள்ளது.
இந்நிலையில் தீவிரவாதம் மற்றும் கல் வீசியவர்கள் என கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களிடம் இருந்து 14 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் போலீஸ் மீது மிளகாய் பொடியை தூவி மேலும் அந்த போலிசை தாக்குதல் நடத்தியதுடன், அவரிடம் இருந்த ஏகே 47 ரக துப்பாக்கியையும் பயங்கரவாதி கும்பல் பறித்துச் சென்றுள்ளனர்.
முகம்மது ஹனீப் என்ற போலீஸ், பணி முடித்து தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல், அவர் மீது மிளகாய் பொடி தூவி உள்ளது. தொடர்ந்து அவரை பலமாக தாக்கி விட்டு, அவரிடம் இருந்த ஏகே 47 ரக துப்பாக்கியை பறித்துச் சென்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லாவில் நடந்த குண்டு வெடிப்பில் மூன்று குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லாவில் உள்ள சோபூரில் ராணுவ முகாம் அமைந்துள்ள இடத்தில் இன்று திடீரென குண்டு வெடிப்பு நடந்தது.
இதனால், குண்டு வெடிப்பில் மூன்று குழந்தைகள் காயடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.
இந்த குண்டு வெடிப்பு நடந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக சோபூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்மீத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள ஷோபியன் மாவட்டத்தில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினரின் ரோந்து வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு, தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் செக்டாரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே ரிசர்வ் பொறியியல் படை ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாமில் தொழிலாளர்களாக பொதுமக்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த முகாமில் இன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகினர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.