SOCIAL MEDIA: இன்ஸ்ட்ராகிராம், பேஸ்புக், டிவிட்டர் நாளை முடக்கப்படுமா?

சமூக ஊடக நிறுவனங்கள் தொடர்பான புதிய விதிகள் நாளை முதல் (மே 26, 2021) முதல் நடைமுறைக்கு வருகின்றன. சமூக ஊடக நிறுவனங்கள் இந்திய சட்டங்களுக்கு இணங்கவில்லை என்றால், அவற்றுக்கு சிக்கல் ஏற்படலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 25, 2021, 08:44 AM IST
  • கூ சமூக ஊடக நிறுவனம் அரசின் புதிய விதிகளை பின்பற்றத் தொடங்கிவிட்டது
  • வேறு எந்த சமூக ஊடக நிறுவனங்களும் இதுவரை புதிய விதிகளை பின்பற்றவில்லை
  • அமெரிக்க தலைமையகத்திலிருந்து அறிவுறுத்தலுக்காக காத்திருப்பதாக நிறுவனங்கள் கூறுகின்றன
SOCIAL MEDIA: இன்ஸ்ட்ராகிராம், பேஸ்புக், டிவிட்டர் நாளை முடக்கப்படுமா?   title=

புதுடெல்லி: சமூக ஊடக நிறுவனங்கள் தொடர்பான புதிய விதிகள் நாளை முதல் (மே 26, 2021) முதல் நடைமுறைக்கு வருகின்றன. சமூக ஊடக நிறுவனங்கள் இந்திய சட்டங்களுக்கு இணங்கவில்லை என்றால், அவற்றுக்கு சிக்கல் ஏற்படலாம்.

புதிய விதிகளை பின்பற்றி செயல்படாத சமூக ஊடக நிறுவனங்கள் தங்களுடைய பாதுகாப்பை இழக்க நேரிடும். விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது இந்திய சட்டப்படி குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, மத்திய அரசு சமூக ஊடகங்களுக்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. மே மாதம் 26ஆம் தேதி முதல் அவை நடைமுறைக்கு வரும். அதற்கு முன்னதாகவே அரசின் புதிய விதிகளை பின்பற்றுமாறு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் (WhatsAPP) மற்றும் பிற நிறுவனங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

Also Read | Yaas: மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டது, மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றம்

இருப்பினும், கூ (Koo) தவிர உயர் சமூக ஊடக நிறுவனங்கள் எதுவும் அரசின் புதிய விதிகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. அரசாங்க வழிகாட்டுதல்களை இந்த சமூக ஊடக நிறுவனங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையா அல்லது இந்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றத் தயாராக இல்லையா என்ற தீவிரமான கேள்வியை இது எழுப்புகிறது.

புதிய விதிகளை நடைமுறைப்படுத்த ஆறு மாதங்கள் வரை கால அவசகாசம் கோருவது உள்ளிட்ட பல கோரிக்கைகளுடன் சமூக ஊடக நிறுவனங்கள் மத்திய அரசை அணுகுவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. சில நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள தங்கள்   தலைமையகத்தின் அறிவுறுத்தலுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளன.

இந்த சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் அபராமான லாபம் ஈட்டுகின்றன, ஆனால் அவை தங்கள் இறுதி முடிவை எடுக்க அமெரிக்காவிடமிருந்து உத்தரவுகளைக் காத்திருக்கின்றன. இதில் ட்விட்டர் நிறுவனத்தை குறிப்பாகச் சொல்லலாம். 

Also Read | PSBB Sexual Harassment: பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News