IPL 2024 Recharge Plans : ஐபிஎல் ரசிகர்களுக்கு ஜாக்பாட் தள்ளுபடிகள்... எக்கச்சக்க பலன்களை தரும் ரீசார்ஜ் திட்டங்கள்!

IPL 2024 Vi Special Recharge Plans :  ஐபிஎல் தொடரை முன்னிட்டு வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமான சலுகைகளுடனும், தள்ளுபடிகளுடனும் அறிமுகப்படுத்தியுள்ள ரீசார்ஜ் திட்டங்களை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 22, 2024, 05:40 PM IST
  • ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
  • மே மாதம் வரை ஐபிஎல் தொடர் இருக்கும்.
  • வேடபோன் ஐடியாவின் இந்த பிரத்யேக திட்டங்கள் ஏப். 1ஆம் தேதி வரையே இருக்கும்.
IPL 2024 Recharge Plans : ஐபிஎல் ரசிகர்களுக்கு ஜாக்பாட் தள்ளுபடிகள்... எக்கச்சக்க பலன்களை தரும் ரீசார்ஜ் திட்டங்கள்! title=

IPL 2024 Vi Special Recharge Plans Update in Tamil : 17ஆவது ஐபிஎல் சீசன் இன்று முதல் அடுத்த இரண்டு மாதங்கள் நடைபெற இருக்கிறது. கோடாணகோடி கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடருக்காக காத்திருந்த நிலையில், முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன. தொடக்க விழா நிகழ்ச்சிகள் இருப்பதால் முதல் போட்டியானது இரவு 8 மணிக்கு தொடங்கும் என தெரிகிறது.

நாளை முதல் மற்ற போட்டிகள் இரவில் 7.30 மணிக்கும், மாலை போட்டிகள் 3.30 மணிக்கும் தொடங்கும் என தெரிகிறது. ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம். தொடர்ந்து ஸ்மார்ட் டிவி, லேப்டாப், மொபைல், டேப்லெட் ஆகிய சாதனங்களில் ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமாஸ் தளத்தில் மூலம் இலவசமாகவே பார்க்கலாம். ஜியோ சினிமாவுக்கு சந்தா கிடையாது என்றாலும் போட்டியை காண போதுமான டேட்டா இல்லையென்றால் முழுமையாக உங்களால் கண்டுகளிக்க இயலாது. 

எனவே, கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் போட்டியை காண திட்டமிடும் முன் போதுமான டேட்டா உள்ளதா இல்லையா என்பதையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு ஐபிஎல் போட்டி சுமார் 3 மணிநேரம் வரை நீளும் என்பதால் 2 முதல் 2.5 ஜிபி வரை டேட்டா தேவைப்படலாம். வைஃபை, 5ஜி டேட்டா இருக்கும்பட்சத்தில் பிரச்னையில்லை. மொபைல் டேட்டா வைத்திருந்தால் கஷ்டம்தான். ஒருவேளை உங்களிடம் போட்டியை காண போதுமான டேட்டா இல்லையென்றால் அதற்கென சில பிரத்யேக திட்டங்களும் உள்ளன.

மேலும் படிக்க | ஐபிஎல் ரசிகர்களுக்கு வெறித்தனமான ஆப்பர்... ஜியோவின் முரட்டு ரீசார்ஜ் திட்டங்கள்!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி டேட்டா மட்டுமின்றி ஐபிஎல் தொடருக்காக பல பிரீபெய்ட் திட்டங்களையும் வைத்துள்ளன. அதேபோல், 4ஜி இணைய சேவையை மட்டும் வழங்கி வரும் வோடபோன் ஐடியா நிறுவனமும் தங்களின் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடருக்காக சில பிரத்யேக ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இது பல்வேறு விலை அடுக்குகளின் கீழ் கிரிக்கெட் ரசிகர்களின் தேவைக்கேற்பே பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, சில ரீசார்ஜ் பிளான்களில் தள்ளுபடியையும் அறிவித்துள்ளன, அவற்றை இங்கு காணலாம். 
 
வோடபோன் ஐடியா: ஐபிஎல் 2024 பிரீபெய்ட் திட்ட தள்ளுபடிகள்

ரூ.181 மற்றும் ரூ. 75 ரீசார்ஜ் திட்டங்கள்: வேடபோன் ஐடியா நிறுவனம் 181 ரூபாய் பிளானில் 50 சதவீதம் கூடுதல் டேட்டாவும், 75 ரூபாய் பிளானில் 25 சதவீத கூடுதல் டேட்டாவும் கொடுக்கப்படுகிறது. 

ரூ.298 மற்றும் ரூ.418 திட்டங்கள்: இந்த பிளான்களில் பயனர்கள் முறையே 50ஜிபி மற்றும் 100ஜிபி கூடுதல் டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம். 

ரூ.699 ரீசார்ஜ் பிளான்: இதில் ஒருநாளைக்கு 3ஜிபி டேட்டா, வரம்பற்ற காலிங் உடன் வருகிறது. இதன் வேலிடிட்டி 56 நாள்களாகும். இதில் 50 ரூபாய் தள்ளுபடியும் இப்போது உள்ளது. 

ரூ.1499 ரீசார்ஜ் பிளான்: இதில் தினமும் 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். வரம்பற்ற காலிங் உடன் வரும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாள்கள். இதிலும் 50 ரூபாய் தள்ளுபடி

ரூ.3199 ரீசார்ஜ் திட்டம்:  இதில் தினமும் 2ஜிபி டேட்டா 365 நாள்களுக்கு வழங்கப்படும். வரம்பற்ற டேட்டா மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடிக்கான ஒரு வருட இலவச சந்தா வழங்கப்படுகிறது. இதில் 100 ரூபாய் தள்ளுபடியும் உள்ளது.

மேலும் படிக்க | ஏர்டெல், ஜியோ, வோடாஃபோன் ஐடியா யூசர்கள் ஐபிஎல் பார்ப்பது எப்படி? இதோ சூப்பர் பிளான்கள்!

IPL 2024 : கூடுதல் டேட்டா ஆப்பர்கள்

ரூ.3199 ரீசார்ஜ் பிளான்: இதில் 365 நாள்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இதில் தற்போது 50ஜிபி கூடுதல் டேட்டா இலவசமாக கொடுக்கப்படுகிறது. 

ரூ.3099 ரீசார்ஜ் பிளான்: இதிலும் 365 நாள்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இதில் தற்போது 50ஜிபி கூடுதல் டேட்டா இலவசமாக கொடுக்கப்படுகிறது. 

ரூ.2899 ரீசார்ஜ் பிளான்: இதில் 365 நாள்களுக்கு தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்கப்படும். தற்போது 50ஜிபி கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.   

ரூ. 1499 ரீசார்ஜ் பிளான்: இதில் 180 நாள்களுக்கு தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் 30ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. 

இந்த திட்டங்கள் அனைத்தும் மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.

மேலும் படிக்க | ஏர்டெல் வாடிக்கையாளர்களே! போஸ்ட்பெய்டில் இருந்து ப்ரீப்பெய்டுக்கு மாறுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News