ஜியோ 5ஜி சேவை: இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்டு மாதங்கள் கடந்துவிட்டன. மேலும் ஜியோ தனது 5ஜி சேவையையும் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பலர் இந்த சேவையைப் பெறத் தொடங்கியுள்ளனர். மற்ற நிறுவனங்களின் 5ஜி சேவையிலிருந்து ஜியோவின் 5ஜி சேவை மிகவும் வித்தியாசமாக இருக்கும். இதன் பின்னணியில் உள்ள காரணம் மிகவும் சிறப்பானது. ஜியோ 5ஜி சேவையின் சிறப்பம்சங்கள் என்ன? இதை பெற பயனர்கள் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? இதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
ஜியோ 5ஜி ஸ்டேண்ட் அலோன் நெட்வொர்க்கை ஆதரிக்கும்
ஜியோ 5G ஸ்டேண்ட் அலோன் நெட்வொர்க்கை ஆதரிக்கும். மற்ற நிறுவனங்கள் இந்த நெட்வொர்க்கை ஆதரிக்காது. ஸ்டேண்ட் அலோன் நெட்வொர்க்கை தயாரிப்பதற்கான செலவு சற்று அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இதை துவக்கம் முதல் உருவாக்க வேண்டும். ஆகையால், இந்த நெட்வொர்க்குடன் ஜியோ 5G மட்டுமே வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
ஜியோ நிறுவனம் இதில் அதிக தொகையை முதலீடு செய்து, ஆரம்பத்தில் இருந்தே அதை தயாரித்தது. மற்ற நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக, ஸ்டேண்ட் அலோன் நெட்வொர்க்குக்கு பதிலாக நான் ஸ்டேண்ட் அலோன் நெட்வொர்க்கை பயன்படுத்தின. இதன் காரணமாகத்தான் ஜியோவின் 5ஜி சேவை மட்டுமே உண்மையான 5ஜி சேவையாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ டிக் - கட்டண விவரம் அறிவிப்பு!
ஸ்டேண்ட் அலோன் 5ஜி என்றால் என்ன
ஸ்டேண்ட் அலோன் என்பது முற்றிலும் ஒரு புதிய தளமாகும். இதன் காரணமாக 5ஜி சேவை சீராக இயங்கும். இந்த நெட்வொர்க்கைத் தயாரிக்க 4ஜி இயங்குதளம் பயன்படுத்தப்படவில்லை. இது அதிவேக இணையத்தை வழங்குவதோடு, இதில் போன் அழைப்புகளின் (கால்) தரமும் சிறப்பாக இருக்கும்.
5ஜி நெட்வொர்க் என்பது இந்தியாவில் ஜியோவால் வழங்கப்படும் ஸ்டேண்ட் அலோன நெட்வொர்க் ஆகும். சிலர் இதை அசல் 5ஜி என்ற பெயரிலும் அறிவார்கள். ஸ்டேண்ட் அலோன் தளத்தில் பணிபுரிந்து 5ஜி சேவையை வழங்கும் ஒரே நிறுவனம் ஜியோ மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ மட்டுமே இந்தியாவில் ஸ்டேண்ட் அலோன் 5ஜி ஆதரவுடன் வரும் ஒரே நெட்வொர்க் ஆகும். ஆகையால் இதன் சேவை மிக வேகமாகவும் சிறந்ததாகவும் இருக்கும். இது தவிர, சந்தையில் உள்ள பிற நிறுவனங்கள் நான் ஸ்டேண்ட் அலோன் 5ஜி நெட்வொர்க்கை வழங்குகின்றன. இதில் 5ஜி சேவையை வழங்கும் உள்கட்டமைப்பு முற்றிலும் 4ஜி நெட்வொர்க்கை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
ஆகையால், அதன் தரம் முழுமையான 5ஜி நெட்வொர்க்கை விட குறைவாக இருக்கும். ஒரு முழுமையான 5ஜி நெட்வொர்க்கை அமைப்பதற்கான செலவு மிகவும் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக, பழைய உள்கட்டமைப்பிலேயே 5ஜி சேவையை வழங்க மற்ற நிறுவனங்கள் முடிவு செய்தன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு உண்மையான 5ஜி அனுபவத்தை வழங்க ஜியோ உறுதிபூண்டுள்ளது. இதன் காரணமாக, சந்தையில் இது தொடர்பான விவாதமும் தீவிரமடைந்துள்ளது.
மேலும் படிக்க | ரூ.299-க்கு 56 ஜிபி டேட்டா; ஜியோவின் சூப்பர் பிளான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ