Aadhaar card news: இன்றைய காலகட்டத்தில், நம் அனைவருக்கும் ஆதார் (Aadhaar) மிக முக்கியமான ஆவணம். இது இல்லாமல், நம்முடைய அன்றாட பணிகளில் பலவற்றை மேற்கொள்ள முடியாது. அரசாங்க திட்டங்கள் முதல் எல்லாவற்றிற்கும் ஆதார் இன்றைய காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நம்மிடம் இரண்டு அல்லது மூன்று மொபைல் எண்கள் (Mobile link in Aadhaar) இருப்பதைக் காணலாம். மேலும் எந்த எண்ணை ஆதார் அட்டையில் பதிவு செய்து இருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம். எனவே இதுபோன்ற சூழ்நிலையில் என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்படலாம். கவலைப்படத் தேவையில்லை. உங்கள் ஆதார் அட்டையில் எந்த எண் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பதை அறிய வழிகளை கீழே குறிப்பிட்டுள்ளோம்.
முதலில் UIDAI இன் தளத்திற்கு செல்ல வேண்டும்
நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தினால், ஆதாரில் (Aadhaar Card) எந்த மொபைல் எண் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு நினைவில் இல்லை என்றால், யுஐடிஏஐ (UIDAI) வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் சில நிமிடங்களில் கண்டுபிடிக்கலாம்.
எப்படி கண்டுப்பிடிப்பது அதன் செயல்முறை என்ன?
இதற்காக, நீங்கள் முதலில் uidai.gov.in தளத்திற்கு செல்ல வேண்டும்.
இப்போது இங்கே நீங்கள் ஆதார் சேவை சென்று Verify Email/Mobile Number விருப்பத்தை கிளிக் செய்யவும்.
இங்கே கேட்டக்கப்பட்டுள்ள தேவையான தகவல்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.
இதற்குப் பிறகு, மொபைல் எண் மற்றும் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிடவும்.
எந்த மொபைல் எண் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய, முதலில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
இதற்குப் பிறகு நீங்கள் கையேடு எண்ணை உள்ளிட்டு அதை சரிபார்க்கலாம்.
இணைக்கப்படலாம் என்று நீங்கள் நினைக்கும் எண்ணை உள்ளிடவும்.
இந்த வழியில் நீங்கள் சரிபார்க்க முடியும்
இதைச் செய்த பிறகு, உள்ளிட்ட மொபைல் எண் உங்கள் ஆதார் (Mobile Numbers link Aadhaar) உடன் இணைக்கப்படும். பின்னர் அந்த மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணில் ஒரு OTP வரும். இப்போது நீங்கள் இந்த OTP ஐ உள்ளிட்டு அதை சரிபார்க்க வேண்டும்.
ஆதார் மையத்திற்குச் சென்று உங்கள் பதிவு எண் பற்றிய தகவல்களையும் பெறலாம். இருப்பினும், இதற்காக, நீங்கள் முதலில் அனுமதி வங்க வேண்டும் மற்றும் உங்கள் நேரத்தை செலவிட வேண்டும். ஆனால் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த விரும்பினால் UIDAI வலைத்தளத்திற்கு செல்வதன் மூலம் இந்த வேலையை நீங்கள் எளிதாக செய்யலாம். இதற்காக, நீங்கள் uidai.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். UIDAI வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில், எனது ஆதார் (My Aadhaar) ஐகான் இருக்கும். அதைக் கிளிக் செய்க. Get Aadhaar இல் Book a Appointment ஐக் கிளிக் செய்க.
இந்த செய்தியும் படிக்கவும் | உங்களிடம் 2 வாக்காளர் அட்டைகள் உள்ளதா? எச்சரிக்கையாக இருங்கள்!!