Hero Electric 2 சக்கர வாகனங்களை வாங்குவது எளிதானது: உடனடி நிதி உதவி கிடைக்கும்

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் செயல்முறையின் கீழ், ஆட்டோ நிதி உதவி தவிர, ஹீரோ எலக்ட்ரிக் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள், வசதியான கடன் கால விருப்பங்கள் மற்றும் குறைந்த மாதாந்திர தவணை சலுகைகள் போன்ற பல சலுகைகளும் கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 1, 2021, 06:59 PM IST
Hero Electric 2 சக்கர வாகனங்களை வாங்குவது எளிதானது: உடனடி நிதி உதவி கிடைக்கும் title=

Hero Electric: நீங்கள் ஹீரோவின் இரு சக்கர மின்சார வாகனங்களை வாங்க விருப்பம் கொண்டு, அதற்கு ஆகும் தொகை உங்களுக்கு ஒரு தடையாக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. நீங்கள் ஹீரோ எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை எளிதாக வாங்க முடியும்.

பிடிஐ செய்திகளின் படி, வாடிக்கையாளர்களின் வசதியை மனதில் கொண்டு, அவர்களுக்கு எளிதான நிதி உதவிகளை வழங்க, ஹீரோ எலக்ட்ரிக், வீல்ஸ் இஎம்ஐ -யுடன் (Wheels EMI) இணைந்துள்ளது.

கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் நிதி உதவி கிடைக்கும்

செய்தியின் படி, ஆட்டோ நிதி உதவி தவிர, இந்த கூட்டாண்மையின் கீழ் ஹீரோ (Hero) எலக்ட்ரிக் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள், வசதியான கடன் கால விருப்பங்கள் மற்றும் குறைந்த மாதாந்திர தவணை சலுகைகள் போன்ற பல சலுகைகளும் கிடைக்கும் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

ALSO READ: Ola Electric Scooter: புக் செய்யும் முன் இவற்றை கண்டிப்பாக செக் செய்து கொள்ளுங்கள்

இந்த செயல்முறையின் கீழ், வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த ஆவணங்களுடன் விரைவாகக் கடன் பெற முடியும் என்று ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது

வீல்ஸ் இஎம்ஐ, 13 மாநிலங்களில் 100 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ளது. ஹீரோ எலக்ட்ரிக் சிஇஓ சோஹிந்தர் கில் கூறுகையில், ‘கடந்த சில வாரங்களாக மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான விழிப்புணர்வு மற்றும் தேவை அதிகரித்துள்ளது. இதைப் பற்றி அதிகமான வாடிக்கையாளர்கள் விசாரிக்கத் தொடங்கி விட்டார்கள். மின்சார இரு சக்கர வாகனங்களை தங்கள் அடுத்த வாகனமாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். குறிப்பாக கிராமப்புறங்களில் எளிதான நிதி உதவிக்கான தேவை அதிகமாக உள்ளது. ’ என்று கூறினார்.

நிறுவனங்கள் சார்ஜிங் நிலையங்களை அமைக்கின்றன

நாட்டில் மின்சார வாகனங்களுக்கான (Electric Vehicle) தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இப்போது அனைத்து வாகன நிறுவனங்களும் வெவ்வேறு இடங்களில் சார்ஜிங் நிலையங்களை அமைத்து வருகின்றன. மின்சார வாகன உள்கட்டமைப்பிற்கு நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன.

சில நிறுவனங்கள் மொபைல் சார்ஜிங் ஸ்டேஷன்களின் (Charging Staions) வசதியையும் வழங்கத் தொடங்கியுள்ளன. அதாவது, நீங்கள் பயணிக்கும்போது, உங்கள் காரின் சார்ஜிங் வழியில் எங்காவது தீர்ந்துவிட்டால், நீங்கள் மொபைல் சார்ஜிங் நிலையத்தின் வசதியையும் எடுத்துக் கொள்ளலாம்.

ALSO READ: Tata Tigor EV: அட்டகாசமாக அறிமுகம் ஆன இந்த மின்சார காரின் முழு விவரங்கள் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News