புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா திங்களன்று அதன் அசல் உதிரி பாகங்கள் இந்தியாவில் 100 க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆன்லைன் ஆர்டரில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
தற்போது 2,000க்கும் மேற்பட்ட மாருதி சுஸுகியின் அசல் உதிரிபாகங்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன என்றும் மேலும் பல தயாரிப்புகள் இதில் சேர்க்கப்படும் என்றும் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் ஷாப்பிங்
வாடிக்கையாளர்கள் உண்மையான மாருதி சுஸுகி உதிரிபாகங்களை இணையதளத்தில் இருந்து ஆர்டர் செய்யலாம். மேலும் அவற்றை வீட்டிலேயே நிறுவும் விருப்பத்தையும் அவர்கள் பெறுவார்கள். மாறிவரும் காலங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களைப் பொறுத்து ஆன்லைன் ஷாப்பிங் வேகமாக வளர்ந்து வருவதாகவும், இந்த முயற்சி வாடிக்கையாளர்களுக்கு அசல் பாகங்களைப் பெறுவதை எளிதாக்கும் என்றும் மாருதி சுஸுகி இந்தியாவின் எம்டி மற்றும் சிஇஓ கெனிச்சி அயுகாவா கூறினார்.
ஹேட்ச்பேக் பிரிவில் வலுவான பிடிப்பு
மாருதி சுஸுகி கடந்த சில வருடங்களாக அதன் தயாரிப்பு வரிசையில் ஆக்ரோஷமான பல முடிவுகளை எடுத்து வருகிறது. நிறுவனம் தொடர்ந்து தனது வாகனங்களில் பலவித புதுப்பிப்புகளை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களிடையே மாருதியின் வாகனங்களுக்கு எப்போதும் தேவை இருந்துகொண்டே இருக்கிறது.
ஹேட்ச்பேக் பிரிவில் கிடைத்துள்ள வலுவான பிடிப்புக்குப் பிறகு, நிறுவனம் SUV / கிராஸ்ஓவர் தளத்திலும் தனது பிடியை வலுப்படுத்தும் வேலையைத் தொடங்கியுள்ளதாக இப்போது சமீபத்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | Tiago Vs WagonR Vs Santro CNG: உங்களுக்கான சிறந்த கார் எது? முழு ஒப்பீடு இதோ
வலுவான விற்பனை வளர்ச்சி கணிப்பு
மாருதி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் பல புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவில் மாருதி வாகனங்களின் விற்பனையில் வலுவான அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
செலிரியோ-வின் புதிய மாடலை அறிமுகப்படுத்திய பிறகு, நிறுவனம் அதை சிஎன்ஜி அவதாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்குப் பிறகு, நிறுவனம் பலேனோவை அறிமுகப்படுத்தியுள்ளது. பலேனோவை அறிமுகம் செய்த உடனேயே நிறுவனம் வேகன்ஆர் கார் 2022 மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் மாருதியின் இந்த கார்களுக்கு உள்ள தேவை மற்றும் பிடிப்பு பற்றி அனைவருக்கும் தெரியும். அனைத்து விலை வரம்புகளிலும், வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் மாருதியின் வாகனங்கள் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR