ஐபோன் பலருக்கு பிரியமான போனாக இருந்தாலும், அதன் அதிகமான விலை காரணமாக, பலரால் அதை வாங்க முடிவதில்ல. நீங்களும் ஐபோன் பிரியராக இருந்து, அதிக விலை காரணமாக வாங்க முடியவில்லை என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இப்போது நீங்கள் ஐபோன் 12 ஐ 35,000 க்கும் குறைவான விலையில் வாங்க முடியும். ஐபோன் வாங்க அசத்தலான ஒரு தள்ளுபடியை பிளிப்கார்ட் கொண்டுவந்துள்ளது.
இந்த டீலின் கீழ் ஐபோன் ஐ வெறும் ரூ.31,499க்கு வாங்கலாம். ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் ஐபோன் 12 போனில் 18% தள்ளுபடியை வழங்குகிறது. இது தவிர, இதில் பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன. மேலும் 64 ஜிபி ஐபோன் 12 ஐ வெறும் ரூ.31,499 க்கு வாங்கலாம்.
பிளிப்கார்டின் இந்த டீல் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிள் ஐபோன் 12 இன் 64 ஜிபி மாடல் அக்டோபர் 2020 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அதன் விலை ரூ.79,900 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி, குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் அதிரடியாக உயர்வு
பின்னர், பிளிப்கார்ட் கைபேசியில் தள்ளுபடியை வழங்கியது. இந்த தள்ளுபடிக்கு பின்னர் அதன் விலை ரூ.59,900 ஆனது. இப்போது மீண்டும் பிளிப்கார்ட் ஐபோன் 12 இல் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த தள்ளுபடியைத் தொடர்ந்து, ஐபோனின் விலை ரூ.48,999 ஆக உயர்ந்துள்ளது.
பிளிப்கார்ட்டில் கிடைக்கும் தள்ளுபடியுடன் கார்டு சலுகையையும் எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் இணைத்தால் வாடிக்கையாளர்கள் இன்னும் அதிகமான நன்மைகளை பெற முடியும்.
iPhone 12 சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
பிளிப்கார்டில் கிடைக்கும் தள்ளுபடிக்குப் பிறகு, ஐபோன் 12 இன் விலை ரூ.48,999 ஆக உயர்ந்துள்ளது. இதில் கிடைக்கும் பரிமாற்ற சலுகை, அதாவது எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டால், மேலும் ரூ.17,500 தள்ளுபடி கிடைக்கும். எனினும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் நீங்கள் பெறும் தள்ளுபடியின் அளவு நீங்கள் பரிமாற்றம் செய்யும் போனின் நிலையைப் பொறுத்தது. இது தவிர, பெடரல் வங்கியின் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் ஐபோனை வாங்கினால், 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
மேலும் படிக்க | 15000 ரூபாய்க்கு குறைவான விலையில் OnePlus ஸ்மார்ட்போன்! “அவசரப்படாதீங்க”
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ