இந்திய சந்தையில் பலவிதமான மாடல்களில், வெவ்வேறு அட்டகாசமான விலைகளில் ஸ்மார்ட்போன்கள் நாளுக்கு நாள் வந்துக்கொண்டே இருக்கின்றன. இந்த விதவிதமான ஸ்மார்ட்போன்களில் எதை தேர்ந்தெடுப்பது என்பது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது. பட்ஜெட் விலையில், சிறப்பான அம்சங்களுடன் பல தள்ளுபடிகளில் ஸ்மார்ட்போன்கள் கிடைத்தால் எவ்வித குளறுபடியும் இல்லாமல் வாங்குவதற்கு எளிதானதாக இருக்கும். சிறந்த ஷாப்பிங் தளமான அமேசான் அசத்தலான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது, அந்த வகையில் தற்போது ஓப்போ ஏ54 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
மேலும் படிக்க | ரூ.16,000 மதிப்பிலான Realme ஸ்மார்ட்போனை ரூ.549க்கு வாங்குவது எப்படி?
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஓப்போ ஏ54 ஸ்மார்ட்போன் ஆனது தொடக்கத்தில் ரூ.14,990க்கு விற்பனை செய்யப்பட்டது, தற்போது அமேசானில் விலை குறைக்கப்பட்டு16 சதவீதம் ஃபிளாட் தள்ளுபடி சலுகையுடன் ரூ.12,490க்கு விற்கப்படுகிறது. இந்த விலை குறைப்பின் மூலம் ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரமாக கருதப்படுகிறது. வங்கி சலுகையாக ஹெச்டிஎப்சி க்ரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயனாளர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி சலுகை மூலம் ரூ.1000 வரை விலை குறைக்கப்படுகிறது. அதேபோல எஸ் வங்கி மற்றும் பரோடா வங்கி க்ரெடிட் கார்டு பயனாளர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி சலுகை மூலம் கிட்டத்தட்ட ரூ.4000 வரை விலை குறைப்பு செய்யப்பட்டு இந்த ஸ்மார்ட்போனானது ரூ.1000த்திற்கு கிடைக்கிறது.
அதனையடுத்து எக்ஸ்சேஞ் ஆஃபரின் வாயிலாக இந்த ஸ்மார்ட்போனை பெறுவோருக்கு ரூ.11,450க்கு ஸ்மார்ட்போன் கிடைக்கிறது, மேலும் நீங்கள் மாற்றப்பட்ட மொபைலின் நிலைமையை பொறுத்து கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஓப்போ ஏ54 ஸ்மார்ட்போனானது 6.51 இன்ச் ஹெச்டி + ஐபிஎஸ் எல்சிடி பேனலுடன், 60 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் டேட்டாவையும், 125 ஹெர்ட்ஸ் டச் சேம்பிளிங்கையும் கொண்டுள்ளது. 4ஜிபி மற்றும் 64 ஜிபி வசதிகளில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் மீடியா டேக் ஹீலியோ பி35 ப்ராஸஸர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது அதிவேக சார்ஜிங் வசதியுடன் 5000 எம்எஹெச் பேட்டரியை கொண்டுள்ளது, இதில் செல்ஃபி கேமராவானது 16 எம்பியையும், பேக் கேமராவானது 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி போக்கே லென்ஸுடன் கிடைக்கிறது.
மேலும் படிக்க | 10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் OPPO போன் வாங்க அரிய வாய்ப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR