அதிமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்..? அறிக்கை வெளியிட்ட திமுக அரசு..!

அதிமுக ஆட்சியில் விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான 420 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கை புத்தகத்தை வெளியிட்டுள்ளது திமுக அரசு. 

Written by - Dayana Rosilin | Last Updated : Mar 23, 2022, 12:15 PM IST
  • விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்
  • மக்களுக்கு என்ன செய்தது அதிமுக ஆட்சி
  • வெள்ளை அறிக்கை வெளியிட்ட திமுக அரசு
அதிமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்..? அறிக்கை வெளியிட்ட திமுக அரசு..! title=

கடந்த 2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியின்போது சட்ட பேரவை விதி எண் 110-ன் கீழ் பல்வேறு திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில், எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, எத்தனை திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன போன்ற விவரங்கள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13, ஆம் தேதி இது தொடர்பான அறிக்கையை நிதி அமைச்சர்  பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் 3 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும், இதில் 87 ஆயிரத்து 405 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 167 அறிவிப்புகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

மேலும் படிக்க |அரசு பள்ளி மாணவர்க்ளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு : தீர்ப்பு ஒத்திவைப்பு

இதனை தொடர்ந்து, இது தொடர்பான வெள்ளை அறிக்கை தயார் செய்து தற்போது  420 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், அப்போது வெளியிடப்பட்ட அரசாணையில் 20 அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை எனவும் அதன் மதிப்பீடு 9 ஆயிரத்து 740 கோடியே 73 லட்சம் ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அறிவிக்கப்பட்ட திட்டங்களில்  5 ஆயிரத்து 469 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான 26 திட்டங்கள் கைவிடப்பட்டதாவும், நிதி விடுவிக்கப்படாமலும், பணி தொடங்க படாமலும் உள்ள அறிவிப்புகள் 143 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் மதிப்பீடு 76 ஆயிரத்து 618 கோடியே 58 லட்சம் ரூபாயாக உள்ளது. இந்நிலையில், அறிவிக்கப்பட்டதும் வெளியிடப்படாததுமான திட்டங்களில் சுமார் 189 திட்டங்கள் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது என்ற தகவல் அந்த அறிக்கையில் ஆதாரத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அறிவிக்கப்பட்ட 348 திட்டங்கள் தொடர்பான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்காக மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரத்து 922 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 41 ஆயிரத்து 844 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இனி குடும்பத் தலைவிகளின் பெயரில்தான் வீடுகள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தொடர்ந்து, இதுவரை  87 ஆயிரத்து 405 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 167 திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும்  420 பக்கங்கள் கொண்ட அந்த வெள்ளை அறிக்கை புத்தகத்தில் தகவல் இடம்பெற்றுள்ளது. இந்த வெள்ளை அறிக்கை புத்தகமானது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் மேஜைகளிலும் வைக்கப்பட்டுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News