69% இடஒதுக்கீடு முறைக்கு எதிரான இடைக்கால மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்...!
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக சென்னையை சேர்ந்த மாணவர்கள் முத்து ராமகிருஷ்ணன், சத்திய நாராயணன் ஆகியோர் சார்பில் மருத்துவ மாணவர்களுக்கு 69% இடஒதுக்கீடு செய்யவேண்டும் என்று சென்னையை சேர்ந்த சஞ்சனா, அகிலா அண்ணா பூரணி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு 50% மேல் இருக்கக் கூடாது என கடந்த 1992-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனால், பொதுப் பிரிவு மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 69% இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.' எனவும் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2018-19 கல்வியாண்டில் 50% சதவீத இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். அப்துல் நஜீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதில், 69% இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான இடைக்கால மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.