வரும் 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா நடைபெற உள்ளது. அதில் தமிழகத்தில் தயாரான செங்கோல் நிறுவப்பட உள்ளது. 1947 ஆகஸ்ட் மாதம் திருவாடுதுறை ஆதினம் தந்த செங்கோலை மவுண்ட் பேட்டன் பிரபு நேருவிடம் ஒப்படைத்து சென்றார். அதன் பின் அந்த செங்கோலானது தற்போது அலாகாபாத் மியுசியத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. 28 ஆம் தேதி அந்த செங்கோல் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டு தமிழரின் சிறப்பையும், செங்கோலின் முறையை பற்றி நாடறிய விளக்கும் விதமாக வைக்கப்பட உள்ளது. இது ஒருபுறம் இருக்க 1947 ஆம் ஆண்டு இரவு 11:45 மணிக்கு நம்நாடு சுதந்திரம் அடைந்ததாக கூறி மவுண்ட் பேட்டன் பிரபு அன்றைய மதராஸ் மாகாணம் ஆன தமிழ் நாட்டில் திருவாடுதுறை ஆதினத்தால் உமிடி பங்காரு ஜுவலரி யில் தயாரிக்கப்பட்டு அதை நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் படிக்க | டாஸ்மாக்கில் ரூ. 2000 நோட்டை மாற்றும் திமுக...? பதுக்கல் குறித்து பாஜக குற்றச்சாட்டு
தற்போது அதன் மாதிரி வடிவிலான செங்கோலை உமிடி பங்காரு நகைகடையினர் தயாரித்துள்ளனர். அதன் மேல் பகுதியில் நந்தி, மகாலட்சுமி மற்ஸ்ரீஉம் கொடி அமைக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து உள்ள காலியான பகுதியில் தமிழ் எழுத்துக்கள் பொரிக்கபட்டுள்ளது. 5.03 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறினார். அன்று தயாரிக்கப்பட்ட செங்கோலானது முழுக்க முழுக்க கைகளால் 30 நாட்கள் கால அளவை எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நான்கு தலைமுறைக்கு பிறகு எங்க மூதாதையார்கள் தயாரித்த செங்கோலால் இன்று நாங்கள் பெருமை அடைவதாக உரிமையாளர் ஜித்தேந்தர் கூறினார்.
அன்று சுதந்திரம் கொடுக்கும் போது மவுண்ட் பேட்டன் பிரபு உங்க நாடுகளில் ஒரு ஆட்சி கை மாறும் போது என்ன மரபு கைடைபிடிக்கப்படும் என மவுண்ட் பேட்டன் கேட்டதால் செங்கோல் முறையை குறிப்பிட்டனர். அதன் அடிபடையிலேயே செங்கோலை நேருவிடம் கொடுத்துவிட்டு சென்றனர். தமிழகத்தில் தயாரான செங்கோல் புதிய நாடாளுமன்ற மைய அரங்கை ஆக்கரமித்து தமிழனுக்கு இனி வரலற்றில் பெருமை சேர்க்கும் என்பதில் இனி துளியளவும் சந்தேகமில்லை. " செங்கோல், என்பது 1947 ஆகஸ்ட் 14ம்தேதி ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் அடையாளமாகும். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி ஆதினம் முன்னிலையில் புனிதமான 'செங்கோலை' உரிய மரியாதையுடன் நிறுவுவார்" என்று அமித்ஷா ட்வீட் செய்துள்ளார்.
செங்கோல், என்பது 1947 ஆகஸ்ட் 14ம்தேதி ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் அடையாளமாகும்.
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் மக்களவையில் பிரதமர் @narendramodi ஆதினம் முன்னிலையில் புனிதமான 'செங்கோலை' உரிய மரியாதையுடன் நிறுவுவார்.#SengolAtNewParliment pic.twitter.com/HUXP3N4GAx
— Amit Shah (@AmitShah) May 24, 2023
மேலும், முதலமைச்சர் ஸ்டாலினின் அழைப்பினை ஏற்று, சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திறந்து வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. குடியரசுத்தலைவரின் வேறு பணிகள் காரணமாக ஜூன் 5 ஆம் தேதி வருவதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து ஜூன் 5 ஆம் தேதிக்குப் பதில், குடியரசுத் தலைவர் அளிக்கும் வேறு தேதியில், மருத்துவமனை திறப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ஜூன் 20ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கவுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ