தமிழ்நாட்டின் மின்துறை, மதுவிலக்கு மற்றும ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி, இன்று அதிகாலை அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரது மனைவி கரூரில் இருந்து சென்னை வந்துள்ளார். அவர், சென்னை உய்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆட்கொணர்வு மனு தாக்கல்..
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட இருந்தார். அப்போதுதான் அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரது மனைவி மேகலா கரூரில் இருந்து சென்னைக்கு விரைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் அட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ததுள்ளார். இந்த மனுவில், சட்டவிரோதமாக தனது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜியின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 2:15 மணியளவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமலாக்கத்துறையினரின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக பல அரசியல் கட்சியினர் தொடர் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி கைது? நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
அமைச்சர் கைதி செய்யப்பட்டது ஏன்?
அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் பாேக்குவரத்து துறை அமைச்சர் பொருப்பில் இருந்தார். அப்போது 100க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அவர் பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை நடைப்பெற்று கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன்னர் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் 3-4 நாட்களுக்கு சோதனை நடதத்தினர். இதையடுத்து, சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிலும் சோதனை நடந்தது. 17 மணி நேரத்திற்கும் மேல் நடைப்பெற்ற சோதனையை அடுத்து செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
டெல்லிக்கு அழைத்து செல்ல திட்டம்?
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து செல்ல உள்ளதாக தகவல்வகள் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜிக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை முடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அவரது நிலையை பொருத்து அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமா வேண்டாமா என்பதை அமலாக்கத்துறையினர் முடிவு செய்வார்கள் என கூறப்படுகிறது.
அரசியல் கட்சியினர் கண்டனம்:
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “பாஜகவின் அமலாக்கத்துறையினரின் இந்த செயல் மனிதநேயமற்றது” என கடும் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவரையடுத்து, வைகோ, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான உள்ளிட்ட பலர் தொடர் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க | டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறாரா செந்தில் பாலாஜி? அமலாக்கத்துறையின் ப்ளான் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ