இந்தியை திணிக்க முயன்றால் இந்தியாவின் ஒற்றுமை பாதிக்கப்படும் - அன்புமணி!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத்தர வேண்டும் என்று அன்புமணி கூறினார்.  

Written by - RK Spark | Last Updated : May 2, 2022, 10:12 AM IST
  • இந்தியை திணிக்க முயன்றால் ஒற்றுமை பாதிக்கப்படும்.
  • நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத்தர வேண்டும்.
  • தமிழகத்தின் வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டும்.
இந்தியை திணிக்க முயன்றால் இந்தியாவின் ஒற்றுமை பாதிக்கப்படும் - அன்புமணி! title=

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மஹாலில் ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு பாமக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே மணி தலைமை தாங்கினார். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு விதமான ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். 

anbumani

மேலும் படிக்க | சாலைக்கு விவேக் பெயர்... அரசாணை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு ரசிகர்கள் நன்றி

அதில், இந்தியா ஒற்றுமையான நாடு என்றும் இந்தியாவில் இந்தியை திணிக்க முயன்றால் இந்தியாவின் ஒற்றுமை பாதிக்கப்படும் என்றும், தமிழகத்திற்கு இருமொழிக் கொள்கை தமிழ் மொழி, இணை மொழியாக ஆங்கிலம் உள்ளது, இதுவே போதுமானது வேறு எந்த மொழியையும் திணிக்க கூடாது என்றும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நீட் உள்ளிட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறினார். நீட் மசோதா என்பது தமிழ்நாட்டிற்கு பொருத்தமான தமிழ் நாட்டிற்கு தேவையான மசோதா என்றும் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத்தர வேண்டும் என்றும் கூறினார்.

எனவே ஆளுநர்  காலம் தாழ்த்தாமல் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து  பேசிய அன்புமணி ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டத்தால் கொலை மற்றும் தற்கொலைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன, ஆன்லைன் சோதனை ஏற்படும் இழப்புகளை தவிர்க்க சட்டப்பேரவையில் உடனடியாக வலுவான மசோதாவை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். மேலும் ரயில் தண்டவாளங்கள் போல தமிழக அரசும்,தமிழக ஆளுநரும் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டுமென தெரிவித்தார்.

மேலும் படிக்க | சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை...காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News