ஈரோட் மாவட்டத்தில் இதுவரை 27 பேர் COVID-19-க்கு சாதகமாக சோதனை முடிவு பெற்றுள்ள நிலையில், 1,09,837 நபர்களைக் கொண்ட மொத்தம் 29,834 குடும்பங்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெருந்துரையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தற்போது 89 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர்களில், 27 பேர் கொரோனா நேர்மறை முடிவு பெற்றுள்ளனர். நேர்மறை சோதனை பெற்ற மேலும் 4 பேர் கோவையில் உள்ள E.S.I மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அறிக்கை 46 பேர் இதுவரை எதிர்மறையாக சோதனை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"ஈரோடு சிட்டி, கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகள், பவானி மற்றும் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் மொத்தம் 29,834 குடும்பங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர், மேலும் அவர்கள் மருத்துவ குழுக்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்" என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அறிகுறிகளை சரிபார்க்க மாவட்டத்தில் வீடு வீடாக கணக்கெடுப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரவித்துள்ளார். மேலும் நிலைமையை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும், எல்லா இடங்களிலும் தனிப்பட்ட தூரத்தை கைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
நாட்டை பெறும் துயரத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 3800-க்கும் மேற்பட்டோரை பாதித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த கொடிய வைரஸுக்கு 105 பேர் பலியாகி இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் 485 நேர்மறை வழக்குகள் மற்றும் 5 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதிகப்பட்சமாக சென்னையில் 91 வழக்குகள் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 27 வழக்குகள் பதிவாகியுள்ள குறிப்பிடத்தக்கது.