ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இதுவரை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்த அவர், உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மீண்டும் எம்பியாக தொடர்கிறார். அதனால், இனி ராகுல்காந்தி நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்க முடியும். ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. சூரத் நீதிமன்றம் தண்டனை விதித்தவுடன் நாடாளுமன்ற செயலகம் எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்ட அறிவிப்பை வெளியிட்டது. அதனை இப்போது மக்களை சபாநாயகர் நீக்கினால் மட்டுமே ராகுல் காந்தியால் நாடாளுமன்றம் செல்ல முடியும்.
மேலும் படிக்க | இந்தி மொழி திணிப்பா? அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் அதிரஞ்சன் சவுத்திரி நீதிமன்ற உத்தரவு நகலுடன் மக்களை சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு கடிதமும் எழுதியுள்ளார். ஆனால் இதுவரை ராகுல்காந்தியை நாடாளுமன்றத்தில் அனுமதிப்பது குறித்தான அறிவிப்பை மக்களவை செயலகம் வெளியிடவில்லை. எதிர்கட்சிகள் சார்பில் இந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்நோக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து டிவிட்டரில் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி நீக்குவதற்கு காட்டப்பட்ட வேகம், அவர் மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் அனுமதிப்பதில் காட்டப்படவில்லை. அவருடைய எம்பி பதவி உடனடியாக ஏற்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
(@mkstalin) August 6, 2023
நாடாளுமன்றத்தில் சகோதரர் ராகுல்காந்தியை பார்க்க பாஜக பயப்படுகிறதா? என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார். இதே கேள்வியை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹூவா மொய்தாராவும் எழுப்பியுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவு வந்து 48 மணி நேரம் கடந்திருக்கும் நிலையில் ராகுல்காந்தியின் எம்பி பதவி ஏற்பு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை ஏன் என கேட்டுள்ளார்.
(@MahuaMoitra) August 6, 2023
பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கும் நிலையில் இதில் ராகுல்காந்தி பங்கேற்க வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் விரும்புகின்றன. ஆனால், அதற்கு மக்களவை சபாநாயகர் அனுமதிக்க வேண்டும். ஒருவேளை அவருடைய எம்.பி பதவி ஏற்றுக் கொள்ளப்படும்பட்சத்தில் ராகுல்காந்தி மக்களவை விவாதத்தில் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் பல்வேறு கேள்விகளை எழுப்புவார்.
மேலும் படிக்க | அரசு வேலை தேடுகிறீர்களா..? இது போன்றவரின் வலையில் சிக்காமல் இருங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ