மீனவர் உடலை வாங்க மறுப்பு: மீனவர்கள் போராட்டம்!

Last Updated : Mar 8, 2017, 09:50 AM IST
மீனவர் உடலை வாங்க மறுப்பு: மீனவர்கள் போராட்டம்! title=

இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்திய கடல் எல்லையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்கரை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்சோ (22) என்பவர் கழுத்தில் குண்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து, பிரிட்ஜோ உயிரிழப்புக்கு நியாயம் கேட்டும், தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.

மீனவர் உயிரிழப்புக்குக் காரணமான இலங்கைக் கடற்படையினரைக் கைதுசெய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரை வெளியேற்ற வேண்டும். மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், மத்திய அமைச்சர்கள் நேரில் வந்து உறுதி தர வேண்டும் என்று மீனவர்கள் தரப்பு கூறியுள்ளது.

மேலும், இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை மீனவர் பிரிட்ஜோ உடலை வாங்க மாட்டோம் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக உயிரிழப்புகள் ஏதும் நடைபெறவில்லை, ஆனால் தற்போத மீனவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவம் ஆதம்பாலம் பகுதியில் நடந்தது. இலங்கை கடற்படையினர் குண்டுமழைகளை பொழிந்தனர். அதனால் நாங்கள் உயிருக்கு பயந்து ஓடி வந்துள்ளோம் என கரைக்கு திரும்பிய மீனவர்கள் கூறினார்கள்

Trending News