சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் 50 கிலோ சூடோஃபெட்ரின் எனும் ரசாயனத்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இந்த போதை பொருள் கடத்தலின் மூளையாக தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் செயல்பட்டு இருப்பதும் தெரியவந்திருப்பதாக கூறியுள்ள இந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு, சிக்கியவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2000 கோடி மதிப்புடைய 3500 கிலோ போதை பொருளை கடத்தி இருப்பது தெரியவந்துள்ளது என கூறியுள்ளது.
மேலும் படிக்க | விஜயதரணி விலகல்: காங்கிரஸ் ரியாக்ஷன் - பறிபோகும் எம்எல்ஏ பதவி..!
இப்போது, அந்த திரைப்பட தயாரிப்பாளர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கூறியுள்ளது. அந்த போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டவர் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது தெரியவந்துள்ளது. அவர் லேட்டஸ்டாக இறைவன் மிகப்பெரியவன் என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார். அத்துடன் திமுகவில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்திருக்கிறது திமுக.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்," சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் கழக கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாலும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுகிறார். அவருடன் திமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது" என சொல்லப்பட்டுள்ளது.
இதனிடையே, போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய ஜாபர் சாதிக் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்ததை சுட்டிக் காட்டி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவர், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டறிந்து தமிழ்நாடு அரசு கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | மோடியை எதிர்க்கும் துணிவு யாருக்கும் இல்லை - அண்ணாமலை பேச்சு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ