சென்னையை நெருங்கும் மிக்ஜாம் புயல்
வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் அழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது டிசம்பர் 3 ஆம் தேதி மிக்ஜாம் புயலாக இது உருமாறும். இப்போது சென்னையில் இருந்து 530 கி.மீ தொலைவில் இருக்கும் மிக்ஜாம் புயல் வடமேற்கு திசையில் நகரும் என யூகிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் புயலின் நகர்வை வானிலை ஆய்வு மையம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. புயல் தமிழ்நாட்டை நெருங்கும் சமயத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மிக்ஜாம் புயல்: எப்போது உருவாகிறது? எத்தனை கிமீ வேகத்தில் கரையை கடக்கும்? ரவுண்ட்அப்
திருவள்ளூர் சென்னைக்கு ரெட் அலெர்ட்
புயலின் ஒரு பகுதி சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுவதால் இரு மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கஜா மற்றும் வர்தா புயல்களுடன் ஒப்பிடும்போது மிக்ஜாம் புயலின் காற்றின் வேகம் குறைவாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அந்த புயல்களில் இல்லாத மழைப்பொழிவு மிக்ஜாம் புயலில் இருக்கும் என யூகிக்கப்பட்டுள்ளது. வர்தா மற்றும் கஜா புயல்கள் கரையை கடக்கும்போது சூறைகாற்று வீசி கட்டடங்கள், மரங்கள் எல்லாம் சேதமடைந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியது. ஆனால் அந்த புயல்களைப் போல் காற்றின் வேகம் இருக்காது என்றாலும் அதிக காற்று வீசும். மழைப் பொழிவு அதிகமாக இருக்கும்.
வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுவது என்ன?
வெதர்மேன் பிரதீப் ஜான் மிக்ஜாம் புயல் குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கஜா மற்றும் வர்தா புயல்களைப் போல் மிக்ஜாம் புயலில் காற்றின் வேகம் அதிகம் இருக்காது என்றே கூறியுள்ளார். 2006 ஒக்கிப் புயல், 2008 நிஜா புயல், 2020 நிவர் புயல் எப்படி அதிக மழையை கொடுத்ததோ அவற்றைப் போல் மிக்ஜாம் புயலும் அதிக மழையை கொடுக்கும் என தெரிவித்திருக்கிறார். அதிகபட்சமாக 100 மிமீ முதல் 200 மிமீ வரை மழை கொட்டவும் வாய்ப்பு இருப்பதாக அவர் கணித்திருக்கிறார்.
தேசிய பேரிடர் மீட்பு படை
மிக்ஜாம் புயல் நெருங்குவதையொட்டி காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் பல்வேறு குழுக்களாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். ஆபத்தான பகுதிகளில் அவர்கள் களப்பணியாற்ற தயாராக இருக்கின்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர்கள் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள பல்வேறு குழுக்களை அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | சென்னையை தாக்கப்போகும் புயல் - 4 ஆம்தேதி கரையை கடக்கிறது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ