Mercury Sun Conjunction: கும்ப ராசியில் நாளை மறுநாள் (பிப். 12) புதன் கிரகம் மற்றும் சூரியன் ஆகியவை இணைய இருப்பதால், இந்த 4 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் உண்டாகும்.
Budhaditya Rajyoga: புதன் மற்றும் சூரியன் இணைவதால் புதாதித்ய ராஜயோகம் உண்டாகும். இது இந்த ராசியினருக்கு வாழ்வில் சுபமான மாற்றத்தை அளிக்கும்.
ஜோதிடத்தின்படி, புதன் கிரகம் நாளை (பிப். 11) கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதுமட்டுமின்ற, நாளை மறுநாள் (பிப். 12) அதே கும்ப ராசியில் சூரிய பகவான் நுழைய உள்ளார்.
புதன் மற்றும் சூரியன் ஆகிய இரு கிரகங்களும் கும்ப ராசியில் இருந்து இணைவதால் புதாதித்ய ராஜயோகம் (Budhaditya Rajyoga) உருவாகும். இந்த புதாதித்ய ராஜயோகம் என்பது சுபமான யோகமாக கருதப்படுகிறது. இது பலரின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை செலுத்தும்.
அந்த வகையில், நாளை மறுநாள் முதல் கும்ப ராசியில் சூரியன் மற்றும் புதன் கிரகங்கள் இணைவதால் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வு மொத்தமாக மாறிப்போகும். அவர்கள் யார் யார் என்பதை இதில் காணலாம்.
ரிஷபம் (Taurus): இந்த புதாதித்ய ராஜயோகத்தால் நினைத்த பெரிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலையிலும், தொழிலும் பணம் குவியும். ஒரிடத்தில் இல்லாமல் பல வருமானங்கள் உங்களை வந்துச்சேரும். கல்வி அல்லது போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிபெற்று வருவோருக்கு இது சிறந்த நேரமாகும். வெற்றி வாய்ப்பு அதிகமாகும். குடும்ப வாழ்க்கை இனிமையாகும்.
கன்னி (Virgo): புதிய வேலைதேடுபவர்களுக்கும், வேலையில்லாதவர்களுக்கும் இது சிறந்த காலகட்டமாகும். நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும், நல்ல செய்திகள் வந்து சேரும். பணியிடத்தில் முதலாளியின் நம்பிக்கையை பெறுவீர்கள், இதனால் புதிய பதவிகளும் உங்களை வந்துசேரும். பணப் புழக்கம் திடீரென அதிகமாகும்.
துலாம் (Libra): நீங்கள் இந்த காலகட்டத்தில் கையில் எடுக்கும் அனைத்து காரியங்களும் வெற்றியிலேயே முடியும். சமூகத்தில் உங்களின் சமூக வட்டம் உயரும். மிகவும் பிரபலமானவர்களுடன் உங்களுக்கு பழக்கம் ஏற்படும், இதனால் எதிர்காலத்தில் நன்மைகள் வரலாம். இந்த காலகட்டத்தில் பணமும் குவியும். நீண்ட நாள்களாக வராமல் இருக்கும் பணமும் உங்களை தேடி வரும்.
மீனம் (Pisces): உங்கள் வாழ்வில் இந்த காலகட்டத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும். பணப் புழக்கத்திலும் எந்த குறையும் இருக்காது. வாழ்வில் புதிய பாதைகள் திறக்கும். உங்கள் கடின உழைப்புக்கு நிச்சயம் தக்க சன்மானம் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துகள் மற்றும் கணிப்புகள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை.