தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு இன்று புதுக்கோட்டையில் உள்ள தச்சங்குறிச்சியில் தொடங்கியுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 11 தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டு கடந்த ஆண்டு சென்னை மெரினாவில் மாபெரும் போராட்டத்தை மக்கள் நடத்தியதில் ஜல்லிகட்டு போட்டிக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது.
இந்நிலையில் வருகின்ற ஜனவரி 14-ம் தேதி பொங்கல் திருவிழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில், புதுக்கோட்டையில் ஜல்லிகட்டுப்போட்டி தொடங்கியுள்ளது.
புதுக்கோட்டையில் உள்ள தச்சங்குறிச்சியில் நடைபெற்றும் வரும் ஜல்லிகட்டுப் போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 450 மேற்பட்ட காளைகள் கலத்தில் இறக்கப்பட்டன. 100 மேற்பட்ட வீரர்கள் இதில் கலந்துகொண்டனர்.