Gleneagles Health City: புற்றுநோய் சிகிச்சையில் சாதனை படைத்த சென்னை தனியார் மருத்துவமனை!

100 robotic cancer surgeries in a year Record : சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வருடத்திற்குள் 100-க்கும் மேற்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை ரோபோடிக் மூலம் செய்து சாதனை படைத்துள்ளனர்

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 25, 2024, 10:43 AM IST
  • புற்றுநோய் அறுவை சிகிச்சை
  • ரோபோடிக் மூலம் புற்றுநோய் அறுவை சிகிச்சை
  • சாதனை படைத்த சென்னை மருத்துவமனை
Gleneagles Health City: புற்றுநோய் சிகிச்சையில் சாதனை படைத்த சென்னை தனியார் மருத்துவமனை! title=

ரோபோடிக் உதவியுடன் ஓராண்டில் 100 க்கும் மேற்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சாதனை படைத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் விருது வழங்கி கௌரவித்தார்.

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வருடத்திற்குள் 100-க்கும் மேற்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை ரோபோடிக் மூலம் செய்து சாதனை படைத்துள்ளனர். 

இதை கொண்டாடும் வகையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கண்வெஞ்சன் செண்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

இதில் மூன்றாம் நிலை கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்தியாவிலேயே முதன்முறையாக ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபி உடன் ரோபோடிக் சைட்டோரேடக்டிவ் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 82 வயது பெண்மணியும் கலந்து கொண்டார். அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை சமீபத்திய நான்காம் தலைமுறை ரோபோடிக் உடன் சமீபத்திய டா வின்சி ஷி சிஸ்டம் மூலம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க | அதிகரிக்குமா வங்கி சேமிப்புக் கணக்கு வட்டி? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் SBI சேர்மன் வேண்டுகோள்!

பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறுகையில் இந்த நான்காம் தலைமுறை தொழில்நுட்பத்தின் மூலம் 100க்கும் மேற்பட்ட சிக்கலான மற்றும் வெற்றிகரமான ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை துல்லியமாக நாங்கள் செய்துள்ளோம். இவை நோயாளிகளின் சிரமங்களை வெகுவாக குறைத்துள்ளது.

இந்த குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு அணுகுமுறை மூலம் குறைந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் நோயாளிகள் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருக்காமல் ஒரு சில நாட்களிலேயே டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள். இந்த அறுவை சிகிச்சையானது ரத்த இழப்பைக் குறைப்பதோடு பிரச்சினைகளின் அபாயத்தையும் வெகுவாக குறைக்கிறது என்றும் யாருக்கும் எந்தவிதமான பின்விளைவுகளும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும் உணவுக்குழாய், வயிறு, பெருங்குடல், மலக்குடல் மற்றும் பெண்ணோயியல் புற்றுநோய்கள் உட்பட பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கும் ரோபோடிக் அறுவை சிகிச்சை சிறந்த பலனை அளிக்கிறது. இது நோயாளிகளின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துகிறது. 

மேலும் 3D விஷன் மற்றும் உயர் உருப்பெருக்க திறன்களுடன் கூடிய ரோபோடிக் அமைப்புகளால் வழங்கப்படும்
 
இறுதியில் ரோபோடிக்ஸ் மூலம் 100 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட புற்றுநோய் மருத்துவர்கள் மட்டும் செவிலியர்களுக்கு கமலஹாசன் விருது வழங்கி கௌரவித்தார். 

இந்த விழாவில் விருது வழங்கிப் பேசிய நடிகர் கமல் ஹாசன், சினிமாவில் கையாளும் ரோபோர்ட்டிக் சந்தோஷத்தை கூட்டுமே தவிர ஆயுளை கூட்டாது, ரோபோர்ட்டிக் போருக்கு பயன்படுவதை விட மருத்துவத்திற்கு பயன்படுத்துவது மானுடத்திற்கே பெருமை என்று கூறினார்.

மேலும் படிக்க | ஷாக்கடிக்கும் கரண்ட் திருட்டு! வருஷத்துக்கு ரூ.600 பில்லியன் மின்சாரம் இழப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News