புதுடெல்லி: முன்னாள் இந்திய அணி (Team India) கேப்டன் எம்.எஸ். தோனிக்கு (Mahendra Singh Dhoni) கடிதம் எழுதி ஒரு நாள் கழித்து, பிரதமர் மோடி (PM Narendra Modi) இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு (Suresh Raina) கடிதம் எழுதியுள்ளார்.
சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், நாங்கள் ஆடும் போது நாட்டுக்காக ரத்தத்தையும் வியர்வையையும் சிந்துகிறோம். இந்த நாட்டு மக்களின் அன்பு போல் சிறந்த பாராட்டு வேறொன்றும் இல்லை. அதிலும் நாட்டின் பிரதமரே அன்பு காட்டும்போது வேறேன்ன வேண்டும் என்ற தோனியில் பிரதமருக்கு நன்றி தெரிவித்து உங்கள் பாராட்டை நன்றியுடன் ஏற்று கொள்கிறேன். ஜெய் ஹிந்த்' என்று பதிவிட்டுள்ளார்.
When we play, we give our blood & sweat for the nation. No better appreciation than being loved by the people of this country and even more by the country’s PM. Thank you @narendramodi ji for your words of appreciation & best wishes. I accept them with gratitude. Jai Hind! pic.twitter.com/l0DIeQSFh5
— Suresh Rain (@ImRaina) August 21, 2020
இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவைப் பாராட்டியும், நாட்டுக்காகவும், கிரிக்கெட் விளையாட்டுக்காகவும் செய்த பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்ததை சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில்.,
ALSO READ | "தேசத்தின் அடையாளம்" என தோனியை புகழ்ந்த பிரதமர் மோடி.. நன்றிக்கூறிய தல MSD
தலைமுறைகள் உங்களை ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக நினைவில் வைத்திருப்பது மட்டுமல்லாமல், ஒரு பயனுள்ள பந்து வீச்சாளராக உங்களை நினைவில் கொள்ளும். நீங்கள் கிரிக்கெட்டுக்காகவே வாழ்ந்தீர்கள், அதையே உயிர்மூச்சாகக் கொண்டீர்கள். மிகச்சிறந்த பயணமாக உங்களுக்கு கிரிக்கெட் வாழ்க்கை அமைந்திருக்கிறது, உங்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த கவுரவமாக, இந்திய அணிக்காக மூன்று வகையானப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளீர்கள். பொதுவாக நீங்கள் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்லாமல், சிறந்த பந்துவீச்சாளராகவும், சில நேரங்களில் அணிக்கு தேவைப்படும்போது கேப்டனாகவும் செயல்பட்டுள்ளீர்கள்.
இந்த காலகட்டத்தின் சில சிறந்த சர்வதேச கேட்சுகள் உங்கள் அடையாளத்தைக் கொண்டுள்ளன. நீங்கள் சேமித்த ரன்களின் எண்ணிக்கையை கணக்கிட பல நாட்கள் ஆகும்.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எடுத்தது உறுதியாக கடினமான முடிவுகளில் ஒன்றுதான். ஆனால், நீங்கள் ஒய்வு பெற்றுவீட்டீர்கள் எனும் வார்த்தையை நான் பயன்படுத்தமாட்டேன். ஏனென்றால், இன்னும் நீங்கள் மிகவும் இளமையாகவும், உற்சாகம் நிரம்பியவராகவும் இருக்கிறீர்கள். ஆக்கப்பூர்வமான கிரிக்கெட் இன்னிங்ஸிக்குப்பின் வாழ்வின் அடுத்த இன்னிங்ஸுக்கு தயாராகிறீர்கள். கிரிக்கெட் களத்தில் உங்கள் வாழ்க்கை அருமையாக உள்ளது. இப்போது நீங்கள் உங்கள் புதிய வாழ்க்கைக்கு தயாராக உள்ளீர்கள்.
குஜராத்தில் விளையாடிய போட்டியை நினைவு கூர்ந்த பிரதமர், '2011 உலகக் கோப்பையின் போது உங்கள் செயல்திறனை நாடு ஒருபோதும் மறக்காது, உங்கள் விளையாட்டை அகமதாபாத்தில் உள்ள மொடெரா ஸ்டேடியத்தில் நேரலையில் பார்த்தேன். அந்த நேரத்தில் டீம் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காலிறுதி ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. உங்கள் இன்னிங்ஸ் இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்தது. உங்கள் கவர் டிரைவ் ஷாட்டை ரசிகர்கள் நிச்சயமாக இழப்பார்கள் என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். அந்த போட்டியை நேரலையில் பார்த்தது எனக்கு அதிர்ஷ்டம் என்று கருதுகிறேன்.
வீரர்கள் களத்தில் அவர்களின் செயல்திறனுக்காக மட்டுமல்லாமல், மைதானத்திற்கு வெளியே அவர்களின் நடத்தைக்காகவும் நினைவில் வைக்கப்படுகிறார்கள்.
உங்களின் போராடும் குணம் பல இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழ்கிறது. உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் சில நேரங்களில் காயம், வலி போன்ற பின்னடைவுகளைச் சந்தித்து இருந்தாலும் அந்த அனைத்து சவால்களையும் மீறி மேலே வந்துள்ளீர்கள்.
அணியின் உற்சாகம், உத்வேகத்துக்கு அர்த்தம் உள்ளவராக ரெய்னா எப்போதும் திகழ்வார். உங்களின் தனிப்பட்ட கிரிக்கெட் வாழ்க்கை மேம்பாட்டுக்காக மட்டும் விளையாடவில்லை, இந்திய அணிக்காகவும், தேசத்துக்காகவும் விளையாடியுள்ளீர்கள்.
மைதானத்தில் உற்சாகம் அளப்பரியது. எதிரணி யாரேனும் விக்கெட்டை இழந்தால் அதனால் உற்சாகம் அடைந்து மகிழ்ச்சியோடு ஆர்ப்பரிக்கும் முதல்வீரர் நீங்கள்தான் என்பதை பார்த்திருக்கிறோம். சமூகத்துக்கான உங்களின் அக்கறை, கருணை பல்ேவறு தருணங்களில் வெளிப்பட்டுள்ளது.
மகளிர்மேம்பாடு, அதிகாரமளித்தல்,ஸ்வச் பாரத் ஆகியவற்றில் ஆத்மார்த்தமாக ஆதரவு அளித்துள்ளீர்கள். இந்தியக் கலாச்சாரத்தோடு நீ்ங்கள் கலந்திருப்பதையும், நாட்டின் மதிப்பு மிக்க விஷயங்களிலும், பாரம்பரியத்திலும் இளைஞர்கள் கலந்திருப்தை நினைத்து பெருமைப்படுகிறேன்.
அடுத்து உங்களுடைய 2-வது இன்னிங்ஸ் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் மனைவி பிரியங்கா,குழந்தைகள் கிரேஸியா,ரியோ ஆகியோருடன் மகிழ்ச்சியோடு காலத்தை செலவு செய்வீர்கள் என நம்புகிறேன். இளைஞர்களுக்கு உற்சாகம் ஊட்டியதற்கும், விளையாட்டில் இந்தியாவில் முன்னணிப்படுத்த முயன்றதற்கும் நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.