ஜிம்பாபே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் இளம் இந்திய அணி இந்த தொடரில் விளையாடியது. விராட் கோலி இந்த தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அணியில் இடம் பெறவில்லை. முதலில் தவான் தலைமையில் அணிவிக்கப்பட்ட இந்திய பிறகு,கே எல் ராகுல் தலைமையில் விளையாடியது. முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்தது இந்திய அணி. கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
CHAMPIONS#TeamIndia pic.twitter.com/nVxqZ9A7v4
— BCCI (@BCCI) August 22, 2022
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. வழக்கம் போல இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டினர். தவான் 40 ரன்களும், கே எல் ராகுல் 30 ரன்களும் அடித்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். பின்பு ஜோடி சேர்ந்த கில் மற்றும் இஷான் கிஷன் சிறப்பாக ஆடினர். தொடர்ந்து நல்ல பேட்டிங்கை கொடுத்து வரும் கில் சதம் அடித்து அசத்தினார். 95 பந்துகளில் 130 ரன்கள் அடித்து ஒருநாள் போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். மறுபுறம் கிஷன் அரை சதம் அடித்தார். இந்திய அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிய 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 289 ரன்கள் அடித்தது. ஜிம்பாபே தரப்பில் பிராட் எவன்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
Innings Break!
A brilliant 130 from @ShubmanGill as #TeamIndia post a total of 289/8 on the board.
Scorecard - https://t.co/ZwXNOvRwhA #ZIMvIND pic.twitter.com/sKPx9NzWwi
— BCCI (@BCCI) August 22, 2022
மேலும் படிக்க | இந்தியா Vs ஜிம்பாப்வே - முதல் சதம் அடித்தார் கில்
கடினமான இலக்கை எதிர்த்து ஆடிய ஜிம்பாபே அணிக்கு ஆரம்பத்தில் விக்கெட்கள் சரிய தொடங்கின. சீன் வில்லியம்ஸ் 45 ரன்கள் அடிக்க, 112 ரன்களில் 5 விக்கெட்களை இழந்தது ஜிம்பாபே. சிக்கந்தர் ராசா மட்டும் பொறுப்புடன் விளையாடி மோசமான ரன்களில் இருந்து அணியை காப்பாற்றினார். சிறப்பாக ஆடிய சிக்கந்தர் ராசா 95 பந்துகளில் 115 ரன்கள் அடித்து அசத்தினார். அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்ப தனி ஆளாக அணியை கொண்டு சென்றார். இவரது அதிரடியில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாபே வெற்றி பெரும் நிலை கூட வந்தது. ஆனால் கில்லின் சூப்பரான கேட்சால் அவுட் ஆகி வெளியேறினார். 49.3 ஓவரில் 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஜிம்பாபே அணி. இந்த போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
What a remarkable hundred from the Zimbabwe legend, Sikandar Raza, you beauty. 100* from just 87 balls while chasing 290 runs. pic.twitter.com/RHAnjDYuqo
— Johns. (@CricCrazyJohns) August 22, 2022
மேலும் படிக்க | ஆசியக்கோப்பை 2022; சச்சினின் சாதனையை முறியடிக்கப்போகும் ரோகித்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ