Rohit Sharma News | இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 ஆம் தேதி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளுடன் சமநிலையில் இருக்கின்றன. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையென்றால் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
கேப்டன் ரோகித் சர்மா மோசம்
இப்படியான இக்கட்டான சூழலில் தான் இந்திய அணி நாளை மறுநாள் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பவுலிங்கில் சிறப்பாக இருக்கும் இந்திய அணி பேட்டிங்கில் பெரும் தடுமாற்றத்தை எதிர் கொண்டிருக்கிறது. முன்னணி பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட ஒழுங்காக ஆடவில்லை. விராட் கோலி, ராகுல் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிய நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சொதப்பினர். ஜெய்ஷ்வால், சுப்மன் கில், ரோகித் சர்மா, ஆகியோர் படு கேவலமான பேட்டிங்கை ஆடிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா கடைசி 12 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டும் அடித்திருப்பதுடன், சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறிக் கொண்டிருக்கிறார். ஒரு கேப்டனாக அவர் தன்னுடைய பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் விரும்பினாலும் விலக முடியாது... ஏன் தெரியுமா?
இந்திய அணி பிளேயிங் லெவன் மாற்றம்
பந்துவீச்சில் பும்ரா, சிராஜ், நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். சுழற்பந்துவீச்சு மட்டும் இந்திய அணி சிக்கலாக இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் நன்றாக பந்துவீசிய நிலையில், அவரை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நீக்கிவிட்டு அஸ்வின் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரால் 2வது டெஸ்டில் எதிர்பார்த்த ரிசல்ட் கொடுக்க முடியவில்லை. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியில் மாற்றம் இருக்கப்போகிறது. துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார்கள் என தெரிகிறது. அஸ்வின், ராகுல் நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
ஓப்பனிங்கில் மாற்றம்
ஒருவேளை கேஎல் ராகுல் நீக்கப்பட்டால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஷ்வால் - ரோகித் சர்மா ஓப்பனிங் இறங்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், கேஎல் ராகுல் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பேட்டிங் ஆடியிருக்கிறார். அவரை நீக்குவது கேப்டன் ரோகித் சர்மா மீது விமர்சனத்தை அதிகரிக்கும். கடைசி 12 இன்னிங்ஸ்களில் மிக மோசமாக ஆடிக் கொண்டிருப்பது ரோகித் சர்மா தான். அவர் தன்னுடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்தாமல் மற்ற பேட்ஸ்மேன்களை குறை சொல்லி வெளியே உட்கார வைப்பது நியாயமில்லை என ஏற்கனவே விமர்சனம் இருக்கிறது. இதனால், கேப்டன் ரோகித் சர்மா என்ன முடிவு எடுக்கப்போகிறார், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் இருக்கப்போகிறது என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
மேலும் படிக்க | SMATல் கலக்கும் முன்னாள் சிஎஸ்கே வீரர்! வருத்தத்தில் சென்னை அணி! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ