இந்திய அணியினர் சிறப்பாக பந்துவீசுவார்கள் - ராகுல் டிராவிட் நம்பிக்கை

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியினர் சிறப்பாக பந்துவீசுவார்கள் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 4, 2022, 07:25 AM IST
  • சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா
  • ஜடேஜா காயம் காரணமாக விலகல்
  • இந்திய அணியினர் சிறப்பாக பந்துவீசுவார்கள் என டிராவிட் நம்பிக்கை
 இந்திய அணியினர் சிறப்பாக பந்துவீசுவார்கள் - ராகுல் டிராவிட் நம்பிக்கை title=

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஆசிய கோப்பையில் லீக் சுற்றுகள் முடிந்து சூப்பர் 4 சுற்று தொடங்கியுள்ளது. சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை இலங்கை வீழ்த்தியது. இந்நிலையில் இன்று பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்தச் சூழலில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் துபாயில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாகிஸ்தானுடனான இன்றைய போட்டிக்கு எங்களிடம் சிறந்த பந்து வீச்சுத் தாக்குதலும் உள்ளது என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. எல்லோரும் பல விஷயங்களை முயற்சி செய்து சாதிக்க ஆர்வமாக உள்ளனர். மற்றவர்களைப் போல எங்களுக்கு இது ஒரு போட்டி மட்டுமே, நாம் வெற்றி பெற்றால் அது மிகவும் நல்லது, தோற்றால், நாங்கள் மீண்டும் முயற்சி செய்வோம். பாகிஸ்தான் நல்ல பார்மில் உள்ளது. எங்களிடம் நிறைய தரமான வீரர்கள் உள்ளனர். நம்மை மேம்படுத்த இது போன்ற விளையாட்டுகள் தேவை.

பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவை நன்றாகப் பந்து வீசினார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக எங்கள் பேட்ஸ்மேன்கள் கூட ரன்கள் எடுத்துள்ளனர். பாகிஸ்தானிடம் என்ன இருக்கிறது என்பதை நாங்கள் பார்ப்பதில்லை. எங்களின் பலம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறோம். ஜடேஜாவின் முழங்காலில் காயம் ஏற்பட்டதால் ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறினார். உலகக் கோப்பைக்கு இன்னும் நேரம் உள்ளது. எனவே, நாங்கள் அவரை அதிலிருந்து விலக்க முடியாது. 

India

அவர் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் உள்ளார். நான் அவரை விலக்க விரும்பவில்லை. விராட் முந்தைய ஆட்டத்தில் நன்றாக விளையாடினார். கடந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. எங்களைப் பொறுத்தவரை, அவர் எத்தனை ரன்கள் எடுத்தார் என்பது முக்கியமல்ல. அணி உண்மையில் வெற்றிக்கு போராடும் போது ஒரு சிறிய பங்களிப்பு கூட முக்கியமானது. உலகக் கோப்பைக்கு நாங்கள் பெரிய அளவிலான வீரர்களை உருவாக்க முயற்சிக்கிறோம். நல்ல நிலையில் வீரர்கள் விளையாடும் போது 11 பேரை தேர்வு செய்வது ஒரு இனிமையான தலைவலி” என்றார்.

மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவை பந்தாடிய ஜிம்பாப்வே! வரலாற்று சாதனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News